உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

217

"என் வாழ்நாளிலேயே இத்தனை வகைகளை ஒருவேளை உணவில் உண்டது இல்லை என்று வியந்து வியந்து பூரித்தார்” ஒரு பெருமகனார்! என்ன ஆனால் என்ன?

“உணலினும் உண்டது அறல் இனிது”

என்பதற்கு அல்லவா தலை வணங்கி வாழ வேண்டியுள்ளது! ஓயாச்சிக்கலர் ஒருவர்தாம் தட்டிமுட்டிக் கொட்டி அரும்பாடு படுபவர்தாம் கழிச்சல் மருந்தும் பயன்படாமல் போனவர்தாம் 'உணலினும் உண்டது அறல் இனிது" என்பதை உணர்ந்து பயனில்லை! எவ்வெவரும் உணர்ந்து போற்றலே நலவாழ்வில் நல வாழ்வாம்!

64

சுருங்கியே போய்விட்ட என்குடல் ஏற்கும் அளவு தானே ஏற்கும்! திணிக்க முடியுமா? திணறிப் போகவா தின்ன முடியும்?

உண்டபின் கட்டாயம் அன்று கட்டையைச் சார்த்தி ஓய்வெடுக்க வேண்டும் என்பது எல்லார் எண்ணமும் ஆயிற்று. அங்காடிகளையும் வீதிகளையும்

பூங்காக்களையுபோகும் போக்கில் பார்த்துக் கொண்டே

தங்கல் விடுதி சென்றோம். மூன்று மணிமுதல் ஐந்து மணி வரை ஓய்வு! மாலையில் அங்காடிக்குப் போகத் தாமோதரர் திட்டம்!

அதனைச் சுற்ற - கோட்டையைச் சுற்றிய பொழுது ஆயிற்று! இனிவேறு சுற்று வேண்டா என்று படைஞர் நினைவுச் சின்னப் பகுதியைக் காண அழைத்துச் சென்றார்.

முதற்போர்க் காலம் தொட்டு விடுதலைக்குப் பின்னரும் அமரராகியவர் நினைவுச் சின்னம் நெடுந் தொலை கடந்து கடந்து காண நேர்ந்தது. அவ்வளாகத்திலே வேறுமோர் வியப்பான சூழ்நிலை உண்டாக்கப் பட்டுள்ளது.

குரல், துத்தம், கைக்கிளை, இளி, உழை, விளரி, தாரம் என ஏழிசை உண்டு அல்லவா நமக்கு!

அவ்விசைக்கு அடையாளம் தானும் அறியாமல் போய் விட்டது தமிழகம்! "ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ" இவ்வேழ் எழுத்துகளே ஏழிசை அடையாளங்கள்! திவாகர நிகண்டைப் பார்த்தால் எவருக்கும் தெளிவாம்! ஆனால் தெளியவே - தெரியவே மாட்டேன் என்பாரை என்ன செய்ய முடியும்?

-