உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

ஏழிசை நரம்புகள் யாழுக்கு உண்டல்லவோ!

ஒவ்வோர் இசையும் மற்றோர் இசைக்கு இசைவாக இருந்து சுவையூட்டுவது! ஒன்றற்கு ஒன்று மாறு இல்லை!

பொங்கல் சுவை போன்றது அது!

மதம் என்றும், சமயம் என்றும், மார்க்கம் என்றும் தன்னோடு தான் மோதலும் பிறிதோடு மோதலும் பெருகிப் பெருகி உலக அமைதிக்குக் கேடாய்ப் போய்ப் பேயாட்டம் போடும் இந்நாளிலே சமணம், புத்தம், கிறித்தவம், இசுலாமியம், வேதியம், சீக்கியம், பார்சியம் என்னும் சமயங்கள் எல்லா வற்றுக்கும் வழிபாட்டு இடங்கள் அவ்வளாகத்திலே அமைக்கப் பட்டுள்ளது என்பது.

அங்கே அமரநிலை எய்தியவர் ஒருசமயத்தரா? ஒரு மொழியரா? இந்திய ஈகியர் அனைவரும் தாமே! அவரவர் வழிபட ஒரு வளாகத்திலேயே -வழிபட

வாய்ப்பு இருப்பது நல்லது அல்லவோ!

ஆனால் இந் நல்லதிலும் நமக்கொரு நெருடல்! ஈகத்தில் ஒன்றுபட்டு உயிரும் ஈந்த இப்பெருமக்கள், 'உள்ள ஒருமை' ஒன்றே அல்லவோ! நாட்டு நலம் என்னும் ஒன்று தானே அது! அந்நினைவைப் போற்றும் வகையில் இவ்வெழுவகைச் சமயத்தரும் ஓரிடத்து ஒன்றுபட்ட உள்ளத்தராய் வழிபடக் கூடாதா? ஓரிடத்தே இருந்தாலும் அங்கேயும் தனித்தனியே தானே அவ்வச்சமயம் கோலோச்சும்!

வள்ளலார் கண்ட 'சன்மார்க்கம்': ஆன்மநேய ஒருமைப் பாடு ஏற்படக் கூடாதா என்பதே அது!

"ஒத்த தறிவான் உயிர் வாழ்வான்”

என்பது உலகவர் கொள்கையாய் ஆகாமல், வன்கொடும் அறிவியல் பேய்மை உலகம் உய்யுமா? எண்ணும் உரிமை எழுதும் உரிமை நமக்கு உண்டல்லவா!

பௌத்தனாக, சமணனாக, வேதியனாகவா உயிரைத் தந்தான்! இந்தியனாகத் தானே தந்தான்? இன்னும் சொன்னால் மாந்தப் பிறப்பாக மாந்தப் பிறப்பைக் காக்கத் தானே உயிரைத் தந்தான்!

-