உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

இளங்குமரனார் தமிழ்வளம் -30

இராசத்தான் சோத்பூர் பார்மல் பலோதி முதலிய நகரங் களுடன் சாலையால் இணைந்தது. பெரிய சந்தைநகர் எனப்பெயர் பெற்றது. இங்குள்ள கால் நடைச்சந்தை தனிச் சிறப்பினது. இராசபுதனத்தை ஆட்சி செய்த செய்சால் என்பார் (1156) நிறுவியமையால் அப்பெயர் பெற்றது.

ஒரு தொடர்மலை; அதன் முற்பகுதியோ பெருநகர் விரிவு; மலைமேல் உள்ள கோட்டை கண்கவர் மாண்பினது: மலையும் கோட்டையும் நகரைக் காணவருவாரை மிகத் தொலைவிலேயே வருக வருக என வரவேற்பது போல் அமைந்துள்ளது. இம் மாவட்டத்திலே தான் தார்ப்பாலைவனம் உள்ளது. காக்னி என்றோர் ஆறும் இங்கு உண்டு.

சிறிது தொலைவு வண்டி ஓடியபின்னர்ச் சாலையின் ஓரங்களில் சிலர் புல்கட்டு, இலைதழைக்கட்டு வைத்திருக்கக் காண முடிந்தது. ஓரிடத்து இல்லை! சாலை இருபாலும் பலப்பல இடங்களில்! அவற்றை விற்பாரை அடுத்தே பசுவும் காளைகளும் நலிந்து கொண்டிருந்தன, ஏன்?

புல், இலை, தழை முதலியவற்றைச் சாலையில் செல்வார் விலைக்கு வாங்கி மாடுகளுக்குப் போடுவது அறம் (புண்ணியம்) என்பது கொள்கையாம்! அதற்காகவே, அவற்றைவிற்பாரும் தின்னும் மாடுகள் நிற்பதுமாம் என்பதை அறிந்தோம். மேலும் ஓர் உண்மை பெரும்பாலும் புல் இலை தழை விற்பவரின் மாடுகளாகவே அவை இருக்குமாம்!

ரண்டு நினைவுகள் பளிச்சிட்டன. பருந்துக்கு ஊன் போடல் உயரறம்; கருடவழிபாடு எனக் கொண்டவர் ஊர். நெல்லை ஆற்றோர சாலையோர ஊன்கடைக்குச் சென்று அவரிடம் காசு கொடுத்து விட்டால் அவரே அவ்விலைக்குத் தக்க ஊனைப் பருந்துக்கு இட்டு,புண்ணியப் பேற்றைக் காசு தந்தவர்க்கு வழங்கும் இடைத்தரகராக விளங்கி விடுவார்! ஊன் உண்ணாக் கடைப்பிடியரும் ஊன் வழங்கித் தெய்வப் பேரருள் ஊனால் பெறும் உத்தி இஃதாம். இதில் சிவனியரும் விடுபடுவதில்லை! ஆனால் பருந்து அவர்கள் வளர்க்கும் பறவை இல்லை என்பதே ஒரு வேறுபாடு!

சங்கச் சான்றோர் பாடலிலே ஓரடி