உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

இரண்டுபேர், மூன்று பேர்: இருக்கும் டமே சமையல் கட்டு; சற்றே மாபிசைதல்; எரிமூட்டல்; இருப்புச்சட்டி வைத்தல்; தட்டிய மாவைப் பிசைந்து வாட்டல் எண்ணெய் விட்டும் விடாமலும் வேக வைத்து எடுத்தல்: ஏதோ தொட்டுக் கொள்ளல்! எளிதாக முடிகின்றது! எல்லாரும் சமையல்! எல்லாரும் உண்ணல்!

சிறிய விடுதிகளின் முன்னர் கட்டில் - ஆம்! கயிற்றுக் கட்டில்! ஒன்றிரண்டு அல்ல; பல; பலப்பல! கடையினர்க்கு வீட்டினர்க்கு அல்ல! வழியே செல்லும் ஊர்தியர் உந்து ஓட்டுநர் வர சப்பாத்தி பூரி என வாங்கி உண்ண ஓய்ந்து படுத்திருந்து செல்ல வேண்டிய ஏற்பாடு இஃது! கடைகளின் முன்னெல்லாம் கயிற்றுக் கட்டில் இருப்பதன் பொருள் அறியமுடிந்தது!

-

உணவாக்கம் உண்ணல் - என்பவற்றில் எந்தத் தடுப்பும் எந்த மறைப்பும் இல்லை! இளையர் முதியர் என வயது வேறுபாடு இல்லை! ஆளுக் கொரு வேலை. அறு சுவை எல்லாம் என்ன? குடல் தீயை அணைக்க வேண்டியது ஏதாவது தீனி!

-

பக்க மெல்லாம் ஒட்டகம் - குட்டி கூட்டம் கூட்டமாக! அவற்றுக்கு உணவு, வேண்டு மட்டும் கிடைக்க வகை என்ன? இயற்கை முள்மரம் முட்செடிகளை வழங்கியுள்ளது. ஒட்டகம் உயரம் என்பதை எவர் அறியார்? அவ்வொட்டகம் உச்சிக்கிளை மேலும் வாயை வைத்துமுள்ளொடும் உள்ள இலையைப் பறித்து உண்ணுமாறு வளர்த்தி இல்லாத குறுமரங்கள்! இயற்கைப் படைப்பாளி எத்தகைய அறிவன்! எப்பேர்ப்பட்ட அருளன்! எத்தகைய துய்ப்பாளி!

சிலச்சில சந்தைகள்! பாலைவனப் பொருளாகக் கிடைப்பன விற்கமட்டுமா? பாலைவன வாழ்வர்க்கு வேண்டும் உணவு உடை முதலாம் பொருள்கள் வேண்டுமல்லவோ! அவையெல்லாம் வெளியில் இருந்து வந்து தானே ஆக வேண்டும்? ஆதலால் கடைகளை அல்லாமல், ஊடே ஊடே சந்தைகளையும் காண வாய்க்கின்றது.

பெருநகரங்களில் திருவிழா நிகழும். திருவிழாவை ஒட்டித் தேரோட்டம் உண்டு. அங்கே மாட்டுச் சந்தை கூடுவதும் உண்டு. இப்பாலும் அப்பாலும் முளையடித்து ஊடே கயிற்றைக் கட்டி, மாடுகளை வரிசையாகக் கட்டி வைத்தலால் தாம் பணி (தாவணி) எனப்படுகின்றது. தாம்பு கயிறு. அணி - வரிசை.