உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

223

நம் ஊரில் நிகழும் மாட்டுத்தாவணி, ஆட்டுச்சந்தைபோல இராசத்தானில் ஒட்டகச் சந்தை கூடுகின்றது. கண்ணைவிட்டு அகலாக் காட்சி அது!

ஒரு சேர வேந்தன் நாட்டைச் சங்கப் புலவன் உன்மலையில் உள்ள பெண் யானைகள் ஒரு சூலுக்குப் பத்துக் கன்றுகளை ஈனுமோ! இல்லையானால் கற்களிடையே திரியும் ஆனினங்களைப் போல இத்தனை யானைகளைக் காணமுடியுமோ என்றான்! அப்படி ஒட்டகம் ஒரு சூலுக்குப் பத்துக் குட்டிகளைப் போடுமோ என எண்ண வைக்கும் கூட்டம் அது! அது மட்டுமா, கண்ணுக்குத் தெரிந்த பரப்பெல்லாம் உலாவிய ஒட்டகங்கள் துள்ளித் துள்ளி ஓடும் குட்டிகள்! (புறம்:130)

ஒட்டகம் தொல்காப்பியர் காலத்தேயே சுட்டப்படும் விலங்கு. அதன் அருமையான பெயரிலேயே அதன் அடிப்படை உண்மை நிலை புலப்பட்டுவிடுகின்றது!

ஒட்டு அகம்,ஒட்டிக்கிடக்க வல்ல வயிறு! எத்தனை நாள் பட்டுணி! எவ்வளவு நீர் வேட்கை! தாங்கத்தக்க உடலைப் பெற்றது என்பதைக் காட்டும் பெயரீடு அது.

எங்கள் வயிறு ஒட்டும் போல் இருந்தது! ஏதாவது உண்ண வேண்டுமே,பருக வேண்டுமே! ஒட்டகம் போல் கிடக்கவல்ல வயிறு நமக்கு இல்லையே!

ஒரு தோட்ட விடுதி இருந்தது! அதன் அமைப்பே உள்ளே வராதே என்பது போல் விரிந்து பரந்து கிடந்தது. போய்த் தான் பார்ப்போமே என்றால் ஒரு தேநீர் உருபா 50. உணவு வேண்டு மென்றால் சொல்லி ஆக்கி வரும்! விலை உருபா 250

!சுற்றிப்பார்த்து விட்டு வந்தோம்! வேலாயுதனார் என்போல் சிறுகுடியர் அல்லர்! சாரலும் ஓட்டுநரும் குடிப்பு (தேநீர் குளம்பு) விருப்பு உடையவர் அல்லர்! பிறகு ஏன் காத்திருக்க வேண்டும்! இன்னும் இருப்பில் மாச்சில், பழம், பருகு நீர் வேண்டுமளவு உள்ளது! மேலே பார்த்துக் கொள்ளலாம் என்று வண்டியேறினோம்,

மரமோ முள்; உயரமோ குள்ளம்; இனி இலை! சிறிதிலும் சிறிது - ஏன்? வேருக்கு நீர் வரவு குறைவு; அதைக் கொண்டுதான் சிக்கன இயற்கைக் கல்வி வல்ல மரம் செடி கொடி தன் வாழ்வை அமைத்துக கொள்ள வேண்டும்; தாமரை தேக்கு என்பவை போல அகல் இலையாக இருந்தால் உள்ள நீரெல்லாம் நொடிப் போதில்