உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

காய்ந்து உலர்ந்து போகுமே! மரம் படாமல் என்ன செய்யும்? சிறிய

லை 'வறுமையில் செம்மை'யை, 'சிறுகக் கட்டிப் பெருக வாழும்' வாழ்வைக் காலம் காலமாக மக்களுக்குக் கற்பித்துக் கொண்டு இருக்கின்றது, கற்றுக் கொள்ள வேண்டும் மாந்தர் கருதிப் பார்க்க வேண்டுமே!

வழக்கம் போல் வானூர்திப் படைத்துறை வளாக விருந்தினர் இல்லம் தான் தங்குதல்! அதற்குள் படைத்துறை வண்டி எனினும் காலக்கருத்து உண்டு! அதனால் விரைந்து செல்லுதல் வேண்டும்! ஓட்டுநர் திறம் வாய்ந்தவர்; சுறு சுறுப்பு மிக்கவர்; உரிய பொழுதில் சேர்ந்து விடலாம்.

தாமோதரர் வழியனுப்பும் போது, போகும் வழியில் புகழ்வாய்ந்த 'இராம் தேவ்ரா ஒடுக்கம்' ஒன்றுள்ளது! அதன் விழா நாளில் நூற்றுக் கணக்கான கல் தொலைவுக்கு மக்கள் இடமறச் செல்வார்கள். அந்த இடம் செல்லும் சாலையை அடுத்துச் சிலகல் தொலைவில் இருப்பதால் பார்த்துச் செல்லலாம் என்றார். அதனை நினைவு கூர்ந்த ஓட்டுநர் சாலையை விட்டுப் பிரிவுச் சாலையில் சென்றார்! ஒரு குறுமலை முகட்டில் தேவ்ரா ஒடுக்கம் இருந்தது. கீழே இருந்து படிக்கட்டு; கடைவரிசை; கோயில் சூழல்!

உயிர்ஒடுக்கம் என்பது 'வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை' என்று கண்டவர், 'பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை' என்று தெளிந்தவர், வீடும் வேண்டா விறலின் விளக்கமாக உண்ணாது பருகாது தானே உயிர் ஒடுங்கிப் போக உடற்சட்டையை விட்டு உயிர்ப்பறவை பறந்து போக அமைந்தவர் இடமே ஒடுக்கமாம்! அவர் ஒடுங்கிய இடத்தில் இலங்கம் அமைத்து வழிபாடு செய்தலும் கோயில், சுற்று, கோபுரம், கோட்டை, விழா, தேரோட்டம் என விரிதலும் தொல்பழஞ்செய்தியேயாம்! 'இராம் தேவ்ரா' வைணவம் சார்ந்த வழிபாட்டிடம் எனினும் பொதுமை மணம் கமழவே செய்கின்றது. பொதுமக்கள் பார்வை எப்பொழுதும் விரிந்தது; பேர், வடிவு என்பவை எல்லாம் கடந்து சிறுதெய்வம் பெருந்தெய்வம் என்பது பாராட்டாமல் தம் துயரைத் தாமே உருகிநின்று உரைத்து ஆறுதல் பெறுதலே வழிபாடாம்! அதற்குப் பழனியாண்டவரா, முகைதீன் ஆண்டவரா வேறுபாடு இல்லை! மாரியம்மையா மரியம்மையா வேறுபாடு இல்லை! எங்கும் பொதுமக்கள் பொறாமை போட்டி இல்லாப் பொதுமையரே ஆவர்! அவர்களிடம் நூல் இல்லை! தருக்கம் இல்லை! எம்துயர்தீர்த்தார்- தீர்ப்பார் - என்னும்