உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

225

ஒப்படைப்பே அவர்கள் வழிபாடு, ஆதலால், பிணக்கிலா இணக்க முடையவராய் வாழ்ந்தனர்! வாழவும் செய்கின்றனர்! சமயத்தை முழுதுறக் கற்ற மெய்யறிவாளர் எச்சமயத்தர் எனினும் அப் பொதுமக்கள் பொதுமைச் சால்பையே கொண்டு விட்டவர். கடவுள் இல்லை என்பாரையும் வெறுக்காத சால்பராகி விட்டவர். சிக்கல் சிறுமை - சீற்றம் - சிதைப்பு ஆகியவை அரைகுறை ஆட்டம் போடும் அல்லல் பிறவிகளாக வாய்த்து உலகியலைக் கெடுப்பவர் இவ்விருவர்க்கும் இடைப்பட்ட நிலையில் உள்ள கடைப்பட்டாரே என்பதை எவரும் உணர முடியும்!

-

செய்சல்மரை நான்கு மணியளவில் அடைந்தோம்! அதன் மேலே நாற்பதுகல் தொலைவு சென்றால் தார்ப் பாலைவனம்! பொழுதுள்ள போதே பார்த்து விட நேரே சென்றோம்!

இராமேசவரம் திருச்செந்தூர் கன்னியாகுமரிப் பகுதிகள் கடற்கரை சார்ந்தவை. மணல் மலை மலையாகக் குவிந்து கிடக்கக் காணலாம். பனை உச்சி வரை முதல்நாள் மூடிக் கிடந்த மணல் மறுநாள் காலை அடிமரம் வரை காணக் காற்றால் அள்ளிக் கொண்டு போக மணலாடை இழந்து நிற்கக் காணலாம்! நீரருகே சார்ந்த மணற்குவடுகள் அவை! இதுவோ நெருப்பழல் மணல் மேடு - குவியல் - கானல் நீர்ப்பரப்பு! ஆனால் சுற்றுலாவாக வரும் கூட்டத்திற்குக் குறைவு இல்லை.

ஓடும் வண்டியை இடைமறித்து ஒட்டக ஏற்றத்திற்கு அழைப்பார் தடை என்றால் பெருந்தடை! ஆங்காங்கு ஐந்தாறு ஒட்டகம்! அதில் ஏறிச் செல்ல அழைப்பார் மறிப்பு! இவற்றைக் கடந்து வண்டிசெல்லும் இறுதி இடம் வரை சென்றோம்!

ஒட்டகம் ஏறாமல் இருக்க 'சாரலுக்கு' முடியுமா? அவருக்கு ஒத்திசையும் ஓட்டுநர் ஒதுங்கவா செய்வார்? பாலைவனம் வந்து ஒட்டகம் ஏறாமல் போனால் வந்த அடையாளம் தான் என்ன என்பது வேலாயுதர் வினாவொடு கூடிய வேட்கை!

எளியேன் என்ன செய்வேன்? எருமையின் மேல் கூட இதுவரை ஏறி அறியாதவன்! இளமை யிலேயே - சிற்றூர் வாழ்விலேயே அறியாதவன் யான்! சிறுவர்கள் மாடு மேய்க்கிறார்கள் என்றால் - குளத்தில் நீராட்டுகிறார்கள் என்றால் கொண்டாட்டம் எருமை மேல் ஏறுதல் தானே!

-