உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

எருமையைப் பார்க்கிறான் ஒருவன்; அதன் திமிர்ந்து வளைந்து பருத்த கொம்புகளைப் பார்க்கிறான்; ஆண் ஒருவன் பெண் ஒருத்தி வேடம் போட்டுக் கொண்டு கையை வளைத்து ஆடுவது போல் உள்ள தாகக் கருதுகிறான். அதன்மேல் சிறுவன் ஒருவன் ஏறி இருப்பதை நோக்ககிறான். மலைமேல் இருக்கும் மந்தி உவமையாகிவிடுகிறது அவனுக்கு.

“பேடிப் பெண் கொண்டு ஆடுகை கடுப்ப நகுவரப் பணைத்த திரிமருப்பு எருமை மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம் சிறுதொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத் துறுகல் மந்தியில் தோன்றும்"

என்கிறான்.ஒட்டக ஏற்றம் என்னை ஒட்டிக் கொள்ள முன்வந்த அகநானூற்றுக் காட்சி (206) இது.

வேண்டா! வேண்டா! நீங்கள் செல்லுங்கள்! வண்டி, ஈர்த்து இன்புறும் காலம்! ஏறி இன்புறும் காலம்! பார்த்து இன்புறும் காலம் என முந்தையோர் கண்டுகாட்டிய முறையுண்டு! எனக்குப் பார்த்து இன்புறும் காலம் என்றேன்! வேலாயுதர்க்குத் தாம் ஏறியாவது மட்டு மன்று, என்னையும் ஒட்டகத்தில் ஏற்றியாக வேண்டும் என்பது முடிந்த முடிவாக இருந்தது. என்ன செய்வேன்; ஏறாத இடந்தனில் ஏறியது போல ஒட்டகத்தில் ஏறினேன்.படுத்த படுக்கையில் ஒட்டகம் கிடக்க பரப்பிய விரிப்பில் அமர்ந்து இருபாலும் காலைத் தொங்கவிட்டுச் செயற்கைக் கொம்பு ஆக்கி வைத்தது போன்ற உச்சி முளையை நன்றாகப் பற்றிக் கொண்டு அமர்ந்தேன்! ஒட்டகம் எழும் போதே அசைத்த அசை இடுப்பு எலும்பைத் தடவ வைத்தது. நடந்தது மணற்பரப்பில் -பள்ளத்தில் இறங்கியது; மணல் மேட்டியல் ஏறியது! உங்கள்கால் எட்டு - என் கால் எட்டா ஒட்டகக் கால் எட்டு! நெடும் பொழுது. என்னால் ஏறிச்செல்ல இயலவில்லை! நீங்கள் செல்லுங்கள் எனக் கட்டாயமாக இறங்கினேன். வேலாயுதனார் முகம் வாடியது; வலியுறுத்தி ஏற்றியிருக்க வேண்டாமோ என்பது அவர் வாட்டம்! அவர்க்கு வாட்டம் உண்டாக்கி இருக்க வேண்டாமோ என்பது என் உருக்ப் பரிவு! என்ன செய்வது? என் இடுப்பு ஒன்று நான்கு முறை அடிபட்டுத் துயரூட்டியது எனக்குத் தானே தெரியும்! வேலாயுதரும் மேலே செல்லாமல் அமர்ந்தார்!