உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

227

சாரலும் ஓட்டுநரும் ஒட்டக நடை, ஓட்டம் எல்லாம் இன்பியல் செலவாகச் செல்லும் தொலைவரை சென்று மீண்டனர். அவர்கள் வரும் வரை ஓர் அரிய ஆடல் பாடல் காட்சியை நாங்கள் ஏற்பாடு செய்யாமலே, எண்ணிப் பாராமலே வாய்க்கக் கண்டு களித்தோம்.

இராசசுத்தானிய ஆண் பெண் குழந்தை கூடிய ஒரு கூட்டம். அயல் நாட்டவர் இரண்டு மூன்று பேர் அமர்ந்திருந்தனர். எங்களுக்கும் அவர்களுக்கும் இடைவெளி ஏறத்தாழ இருபது அடிகளே!

அவர்களின் முன்னர் ஓர் ஓரமாக ஒரு விரிப்பு அதில் குழல் ஊதல் கொட்டு முழக்கல் -ஆடல் பாடல்! இசையரங்கம் உடனே கிளம்பிவிட்டது! எத்தனை காலம்-எவ்வளவு பொருள் செலவு- என்ன விளம்பரம் - கூத்து - நாடகம் - இசை அரங்குகள் அமைக்க! "ஆச்சி மசாலா" என்பதுபோல உடனடி அரங்கம்! ஆடல் பாடல் கிவிட்டது! படமும் பிடித்து விட்டார்கள்! பணமும் கொடுத்து விட்டார்கள்! தாம் செல்லும் இடங்களில் செல்வர்களை அழைத்து வைத்து அரங்கேற்றிப் பணமும் தேடிக் கொள்வார்கள்! அறிவியல் கலையியல் வளர்ச்சி கொடிகட்டிப் பறக்கும் காலம் அல்லவா!

அவர்கள் மங்கலப்பாட்டு! இழப்பு அவலம்! திருவிழாக் கோலம் உலகறியச் செய்வதிலே ஓர் உள்ளார்ந்த உவப்பு; குதிரை காலைத் தட்டி தட்டி உணவு பெற்றது கண்டோமே. இவர்கள் கொட்டி, தட்டி, இசை கூத்தால் பிழைப்புக் கொள்கின்றனர்!

ஒட்டகம் பற்றிப் படித்த ஒன்று என்னை அவ்வொட்டகம் ஒவ்வொன்றைப் பார்க்கும் போதும் உருக்கிக் கொண்டே இருந்தது!

பாலைவனக் கப்பல் என்னும் அவ்வொட்டகம் எத்தகு பயன் உயிர்! என்ன சுமை! சுமை கமட்டுமா? சுமை ஏற்றுபவனையும் சுமப்பது அல்லவோ! அவன் ஏற்றும் சுமைக்கு எல்லை என்ன? அவன் ஆசைக்கு அளவில்லாதது போல!

தண்ணீர்பல நாள் காணாத் தகைப்பு! இனித்தாங்க முடியாது என்னும் நிலைமை ஏற்பட்டால், ஒட்டகத்தின் திமிலை உடைத்து அதில் தேக்கிவைக்கப்பட்டுள்ள நீரைக் குடித்து உயிர்பிழைப்பான் என்பது ஒன்று!