உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

-

ஒட்டக ஊனைச் சாப்பிடுவார் அதன் தொடைப்பகுதியில் வேண்டும் அளவு எடுத்து அன்று சமைப்பார்களாம்! அவ்வாறே அதனை விட்டு அடுத்த நாள் வேண்டு மளவு எடுத்துக் கொள்வார்களாம்! எழுதும் கையே நடுங்குகிறது! எப்படித்தான் இப்படி இரும்பாய் - கல்லாய் வெடி தகர்ப்புக்கும் தகராக் கிட்டமாய் மாந்தன் உள்ளம் கெட்டிப்பட்டு விட்டதோ? இதனை நோக்க அல்ல எண்ணும் போதே அவனவன் அவனவனாக இருக்கிறானே அன்றி, அவனை இப்படி ஒருவன் படைத்தான் என்பதை உள்ளம் உடைய எவரும் ஒப்பமுடியுமா?அப்படியும் படைத்தது உண்டு என்று ஒப்புக் கொண்டால், அது உயிரியக்கத்தின் ஒரு துளியைத் தானும் உடையதாக இருக்குமா? அதுவா படைப்புப் பெருமையும் வீடருளும் பெருமையும் உடையது?

மீளும் போது மணி ஏழினைத்தாண்டி விட்டது! கோட்டை யுள்ளும் கோட்டையைச் சுற்றிலும் தெருக்கள் அங்காடிகள் குடியிருப்புகள் எனப் பல்கியுள்ளன. பெரும் பாலும் சுற்றுலாவை நம்பிய வாழ்வாகத் தோற்றம் தருகிறது. இரவு உணவு தங்கல் இடத்தின் பொழுது முடித்து விட்டதால் 'இரா' உணவு ஆகவே ஆகிவிடும் நிலை! ஆனால் விடுதியர் ஒருவரும் ஓட்டுநரும் போய் உணவு தேடிக்கொண்டு வந்தனர்! விடியலில் நாசிக்கு நோக்கும் திட்டத்தொடு படுத்தோம். அதற்கு மேல் சுற்றுவதற்குத் திரும்பு திட்டம் உதவியாக இல்லை 8.3.2009 ஆம் நாள் திருச்சிராப்பள்ளி ஊரகம் வேதையனார் குடும்பத் திருமணம் நடத்தவும். நன்னியூர்க் கம்பனார் புதிதமைத்த மனையின் திறப்புவிழா நிகழ்த்தவும் முன்னரே இசைந்து விட்டமை எச்சரிக்கை செய்து கொண்டே இருந்தன!

3.3.2009

என்

காலையில் புறப்படு முன்னரே சிற்றுண்டி தக்கவகையில் வந்துவிட்டது! அன்று நாசிக்கு அடைந்துவிடலாம் என்பது எண்ணம். ஓட்டுநரும் போய்விடலாம் என்றார்! எண்ணத்தின் விரைவுக்குக் கல் கணக்கும் மணிக் கணக்கும் ஒத்துவருமா?

வேலாயுதனார் இன்றே போய்விட இயலாது. அறுநூறு ஆயிரத்திற்கு மேல் உள்ளது. ஓட்டுநர் சொல்லலாம் முடியும் என்று! ஆனால் அயர்வும் உறக்கமும் அவர்க்கும் உண்டுதானே. இன்று அகமதாபாத்தில் இரவு தங்கி மறுநாள் தான் நாசிக்கிற்குச் செல்லலாம்! தங்கும் ஏற்பாடு செய்துவிட்டார்கள் என்றார்.