உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

229

பட்டறிவு பேசும் போது படாமலே அறியும் பேறு கொள்ளலே சால்பு என ஏற்றுப் புறப்பட்டோம்!

நாங்கள் திரும்பிய சாலை வழியில் எங்கோ எப்பொழுதோ ஒருவண்டி எதிரிடும், பாரிய சாலை; நெடிய சாலை; மக்கள் பெருக்கம் குறைவு. செல்வார் பெரிதும் சுற்றுலா வருவாரே! அதனால் ஒரு சீராகத் தடையற வண்டி வந்தது! தடையற என்ற போதே ஒரு தடை இல்லாமல் இல்லை! தடையில்லாத நடை உலகில் உண்டா? நாலுகல் செலவிலேயே தடை ஏற்படல் என்ன, நாலடிச் செலவிலேயே கூட தடை ஏற்படலாமே!

உருளின் காற்றுப் போகிவிட்டது! வெடிக்கவில்லை. வண்டி யோட்டத்திலேயே கண்டு கொண்டார் ஓட்டுநர்! பொறி என்றாலும் இயங்குவது அல்லவோ! அதுவும் நாலாயிரம் அயிரம் ஓடும் ஓட்டத்தில் ஏதாவது தடை ஏற்படாமல் போகுமா? சேம் உருள் செவ்வையாக இருந்ததால் ஓட்டம் அரைமணிப் பொழுது நிற்க, உருள் மாற்றப்பட்டது. அடுத்துச் சில கல்தொலைவில் இருந்த தொழிலகத்தில் காற்றுப் போகிய உருள் ஒட்டி, காற்றும் அடைக்கப்பட்டது! நண்பகல் போது ஆதலால், உணவும் தக்காங்கு முடித்தோம்!

காசுக்குக் கையேந்தினார் ஒருவர்; வேலாயுதர் காசு தாரார்! எனக்கும் உடன்பாடு இல்லாதது; இரவலரை உருவாக்கும் புரவலர் வேண்டா; இரப்பாரை இல்லாமல் உழைப்பாரை ஊக்கும் ஈகப்புரவலரே வேண்டும் என்னும் கொள்கை என்னை ஆட் படுத்தியது ஆகும்.

ஓட்டுநரிடம் உணவு வாங்கித் தரப்பணம் தந்தார் வேலாயுதர் பசித்துக கிடந்த குழந்தை உணவைத் தாவிவாங்கி உண்டதை வேலாயுதர்கண்டார்! எண்ணினேன் மூவரை; ஒருவர் வள்ளலார்; மற்றொருவர் பாவேந்தர்; இன்னொருவர் வள்ளுவர்.

“பசித்தோர் முகம்பார்”

என்பது வள்ளலாரியம்

“புசித்தோர் முகம்பார்

என்பது பவேந்தரியம்.