உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

66

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

'ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல்; அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்'

என்பது வள்ளுவம்.

-

வழியில் இந்திய ஒருமைப்பாட்டின் ஓர் எழில் எங்கும் பரவிக்கிடந்தது. தென்னங்குமரி தொட்டது அது. தென்னங் குமரித் தென்னையோ பனையோ காவிரி நெல்லோ வாழையோ கரும்போ காணமுடியாத இடத்தும் அவ்வொருமைப் பாட்டு விளக்கம் எங்கும் தோன்றவே விளங்கியது! அது வேலிக் கருவேல்!

விண்ணில் இருந்து தூவப்பட்ட வெளிநாட்டு வித்து இந்த நாட்டு மண்ணிலே என்ன போடு போடுகிறது! நிலத்தைக் கெடுக்க பயிர் வளத்தைக் கெடுக்க விதைக்கிறோம் என்பது இல்லாமல் வேளாண் தொழிலுக்கே கரியூட்டப்பட்டது அது! பாலைவனத்தும் வளர்கிறது! தஞ்சை வயலிலும் வளர்கிறது! ஐந்தாற்றுப் படுகை களிலும் பச்சிட்டு நிற்கிறது! அதற்கு விலக்கு - இந்திய ஒப்புரவுக்கு மாறான ஒரு மாநிலம் கேரளம் என்றார் வேலாயுதனார்! ஆம்! அரசே அச்செடியை வளர்க்க அறவே தடுத்து நிறுத்தி விட்டது!

ஆற்றுவளங்களையெல்லாம் 'ஆ' வென உரிய அளவு விடாமல் கொடாமல் கடலுக்குள் போனாலும் போக விடுவோம் - எங்களுக்கு அரிசியும் காயும் ஆடும் மாடும் தந்து காலமெல்லாம் காக்கும் தமிழகத்திற்குக் கையில் ஒட்டிய நீரும் விடேம் என்பார், எவ்வளவு கட்டுத்திட்டத் தோடு தங்கள் மண்ணை நச்சில் இருந்து காத்துளர் என்பதை எண்ண, இப்படிப்பட்டவை எல்லாம் இந்தத் தமிழ்மர மண்டைகளில் ஏறாது போலும்! ஏற ஒருவர் வந்தாலும்.

"தாம் வளர்த்த முள்மரமாயினும்" வெட்ட ஒருப்படார் கூடித் தடுப்பார் போலும்! ஏனெனில் விறகும் கரியும் தரும் கொடை மரம் அல்வோ அது! கள் இறக்கக் கூடாது என்றால், இறக்கியே ஆக வேண்டும் என்று போராட்டம் இல்லையா? ஏன் பதனீர் என்ன, வெல்லம் என்ன, பனையின் தொழில் 'கள்ளில் மட்டுமா உள்ளது'! கள்ளுண்ணாமை என்று அறம் முழங்கிய நாடு இது! அவ்வறவர் பிறந்த மண்ணும் அதுதானாம்!

ஊர் ஊர்ப் பகுதிச் சாலைகளில் ஒன்றிரண்டு பொலி காளைகளைக் காணமுடிந்தது. குசராத்துப் பகுதியில் ஒரு பெருநகர் நாற்சந்திப்பு வட்டத்தின் ஊடு இருபது முப்பது பொலிகாளைகள்