உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளம் விரிந்தால் உலகெலாம் சொந்தம்

231

ஒரு மொத்தமாகப்படுத்தும், நின்றும், உலாவியும் இருக்கக் கண்டோம்!

கோயிலுக்கெனப் பொதுநலங்கருதி விடப்பட்ட காளைகள், கோயில் காளையாய், கட்டற்று மேய்ந்து கொழுத்துப் பொலி காளைகளாய் ஊர்க்கு உதவும் நிலை தமிழகத்தில் இருந்தது. இதுகால் அக்காளைகள் என்ன ஆயின? ஆகின்றன புரியவில்லை! ஒருவகையில் பொது நல அழிப்பில் ஒன்றாகி விட்டதல்லவா அது?

-

கால்நடைவளர்ச்சித்துறை இயற்கை செயற்கைக் கருத்தரிப்புகளை உண்டாக்கி வருகின்றது எனினும் பண்பாட்டுச் சிதைவுதானே அது!

பொழுது மிகப் போகிவிட்டது. வேலாயுதர் கூறியபடி அகமதாபாத்தில் தங்குவதற்கு வானூர்திப் படைத்துறை வளாகத் தலைமைப் பொறியர் இசைவில் தங்க வேண்டும்! அவ்விடம் கண்டுபிடிக்க அரிதாகியது.

-

தானி ஓட்டுநர் ஒருவர் தாம் தேடிக் காட்டுவதாகக் கூறி அங்கு இங்கெனத் தேடி இடத்தைக் கண்டுபிடித்துச் சேர்த்து விட்டே சென்றார்! உரிய காசு பெற்ற அளவின் பின்னரும், உடன் இருந்து உறுதி செய்தே சென்ற அவர் கடமை உணர்வு மதிப்பு மிக்கது! தொழில் தொகை என்பவை எங்கும் உள்ளநிலை! தொகையைப் பெறுபவர் தொண்டாகவும் அத்தொழிலைக் கருதிச் செய்தல் எத்தகைய நலம்! எங்கும் எத்தொழில் செய்வாரிலும் தொழிலொடு தொண்டும் உடனாகக் கடமையாற்றுவார் இருக்கின்றனர். வேண்டுமானால் அவர்கள் எண்ணிக்கை குறைந்த அளவில் இருக்கலாம்!

நேரம் கடந்தும் கூட விருந்தில்த்தார் விரும்பும் உணவு வழங்கினர். இரவு அமைந்து தங்கி, விடியலில் கடமைகளை முடித்துக் காலையுடன் நாசிக்கு நோக்கினோம்.

4.3.2009

இனி இறங்கிப் பார்க்க வேண்டிய திட்டம் இல்லை. சாலை வழியில் காணும் காட்சிகளே காட்சிகள்!

3400 கல் தொலைவு கடந்தாயிற்று. ஏறத்தாழ 600 கல் தொலைவு சென்றால் நாசிக்கை அடையலாம். முதலாவதாக