உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

அகமதாபாத்துக்கு வந்த வழியை விடுத்து வேறு வழியில் வண்டியை ஓட்டினார் ஓட்டுநர்! புதியவை காண்பதைப் புரிந்து கொண்டு செய்த செயல் அது!

மலை காடு வயல் ஊர் என்பன எனினும் புதியவை நோக்க வைக்கும் அல்லவா! ஏர்க்காடு கோடைக் கானல் செலவு போலப் பெரிதும் மலைவழியாக இருந்தது! ஓரிடத்துப பெருந்திரளான மக்கள்! திருவிழா கோயில் வளாகம்! ஒளிவெள்ளம்! நீர்வள மிக்க தெப்பம்! ஓடுவழியில் பார்த்துக் கொண்டேவந்தோம்.

காலை 8.30 க்குப் புறப்பட்ட செலவு நாசிக்கை அடைய இரவு 9 ஆகியது. அறுநூறு கல் வந்தாக வேண்டுமே! மகிழ்வுந்தும் புதுவது! ஓட்டுநர் திறமானவர்! அவரைநாங்களும் எங்களை அவரும் புரிந்து கொண்டு செயல்பட்டதால், புறப்பட்ட போது கொண்ட மகிழ்விலும் குறையாமல் மகிழ்வொடு அவரைவிடுக்கும் நிறைவு ஏற்பட்டது!

“யான் கண்டனையர் என் இளையரும்"

என்னும் பிசிராந்தையார் மொழி நினைவில் நின்றது!

இரவு வழக்கம் போல் வீட்டில் உணவு கொண்டு, விருந்தினர் இல்லத்தில் தங்கினோம்!

5.3.2009 ஓய்வு கொள்வது என்று முடிவு செய்தோம்! என் படிப்பு எழுத்துக்குப் பயன்பட்டது.

6.3.2009 விடியல் 4 மணிக்குப் புறப்பட்டோம் 5.30 க்கு நாசிக்கில் இருந்து புறப்பட்டு மேல் கடல் கழி முக வழி கோவா பாலக்காடு சோரனூர் செல்வது; குருவாயூர் வரை செல்லும். நாங்கள் சோரனூரில் இறங்கிக் கோவையை அடைந்து ஈரோட்டுக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் செல்லும் முடிவு!

வேலாயுதர் சரோசினியார் யான் மூவரும் மீளும் வகையில் சீட்டு எடுக்கப்பட்டிருந்தது.அவற்றை உணவு எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இல்லாமல் கைவயமாகவே கொண்டு செல்லும் ஏற்பாடு களைச் செய்துவிட்டனர்.

பகலெல்லாம் பார்க்க வாய்த்தது! மேல்கடல் கழிமுகம் முன்னர்ப் பார்த்தது இல்லை. கோவாவைப் பார்க்க எண்ணியும் காலம் இல்லாமையால் தொடர்வண்டியில் இருந்து கொண்டே பார்க்கத்தான் முடிந்தது.