உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. அமைதிப்பணி

உலகம் அமைதியை விரும்புகிறது; மிக மிக விரும்புகிறது; அணுக்குண்டுகளை அடுக்கி வைத்து அணிவகுப்பு நடத்தும் அளப்பரும் அறிவியல் வளர்ச்சியுடைய நாடுமுதல், அடிப்படைத் தேவைகளுக்கும் அலமரும் நாடு இறுதியாக அனைத்து நாடுகளும் அமைதி ஒன்றையே நாடுகின்றன. எழுநிலை மாடத்து இனிது வாழும் ஈடில்லாச்செல்வர் முதல், 'இன்றைய பசிக்கு என் செய்வோம்?' என ஏங்கி நிற்கும் ஏழைகள் வரை அமைதியையே நாடுகின்றனர்.

வரவேற்பும் வாழ்த்தும்:

அமைதியை நினைத்து, அதிலேயே நிலைத்து நிற்பவரை உலகம் வரவேற்கின்றது. அமைதியைப் பற்றிப் பேசி அவனியை வாழவைக்கக் கருதுவாரை உலகம் கைதட்டி அழைத்துத் தழுவு கின்றது. அமைதியைப்பற்றி எழுதி அருள் நெறி பரப்பு வாரை உலகம் நெஞ்சார 'வாழ்க! வாழ்க!' என வாழ்த்துகின்றது. அமைதி வழிகளைச் செயலுக்குக் கொண்டு வருதற்காக அரும்பாடுபடும் தலைவர்களை உலகம் அரவணைத்துக் கொள்கின்றது. அவர்கள் மண்ணுலகில் வாழ்ந்தால்கூட விண்ணுலகில் வாழும் வியன்மிகு தெய்வநிலையாளராகவும், வழிகாட்ட வந்த ஒளி விளக்கு களாகவும், குணத்தின் குன்றங்களாகவும் கருதி, உலகம் அவர்களை வரவேற்கின்றது; வாயார வாழ்த்துகின்றது; நெஞ்சார வணங்கு கின்றது.

போர்ப்பகையே போ! :

அன்பொழுக

அமைதி நாட்டம் உடையவர்களை அரவணைப்பது போலவே, 'போரே வா' என்று அழைப்பவரை நினைந்து நெஞ்சம் புண்ணாகிப் புறக்கணிக்கத் தொடங்கி விட்டது உலகம். வெறியூட்டும் பேச்சு, எழுத்து, செயல் எவ்விடத்தில் எந்த மூலையில் கிளம்பினாலும் சரி என்றேனும் ஒரு நாள் எங்கெங்கோ கிளம்பி, உலகப்போராக மாறித் திருக்கூத்தாடத் தவறாது என்னும்