உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 30.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

அச்சம்

இளங்குமரனார் தமிழ்வளம் - 30

அறிவுடையவர்கள்,

அருளுடையவர்கள்

உள்ளத்தெல்லாம் உண்டாகிவிட்டது. ஆகவே 'போர்ப் பகையே போ' என்னும் முழக்கம் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் முழங்கத் தொடங்கிவிட்டது. எந்நாளும் இல்லாத அளவுக்கு ஏன் இந்நாளில் அமைதி வேட்கை உண்டாகிவிட்டது?

உலகப்போர் மூண்டால் :

அறிஞர் ஐன்ஸ்டீனிடம் ஒருவர், "மூன்றாம் உலகப்போர் மூண்டால் உலகம் எப்படி இருக்கும்?" என்று வினாவினார். அணுவினைக் கண்டு அதனை, ‘ஆக்கப்பணிக்கு அன்றி அழிப்புக் கொடுமைக்குப் பயன்படுத்தக்கூடாது' எனக்கூறிய அப்பெருமேதை 'அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்பதற்கு ஏற்பத் தம் மூளையை உலக உடைமையாக வைத்துச்சென்ற அவ்வருளாளர், இவ்வினாவிற்கு என்ன விடை கூறினார்?

மூன்றாம் உலகப்போர் தோன்றினால் அஃது எத்தகையதாக இருக்கும் என்பதைக் கூற இயலாது. ஆனால், நான்காம் உலகப்போர் ஒன்று நடந்தால் அதில் பழங்காலக் கருவிகளே பயன்படுத்தப்படும் என்பதை மட்டும் உறுதியாகக் கூறலாம் என்றார்.

இக்காலக் கொடும்போர் முறையை இதனினும் குறிப்பாகவும் தெளிவாகவும் எவ்வாறு வெளிப்படுத்துவது? உலகம் முழுக்க முழுக்கப் புல் பூண்டுகள் கூட இல்லாமல் ஒழியும்; புத்துலகம் ஒன்று தோன்றிப் 'புல்லாகிப் பூடாகிப் புழுவாகி' வளரும்; அதன் பின்னரே மாந்தர் தோன்றி உலகத்தொடக்க நாளில் கையாண்டு வளர்ந்தது போல் கற்கருவிகளைப் பயன்படுத்துவர்! சொல்ல வேண்டியதைச் சொல்லவேண்டிய முறையில் அறிஞர் சொல்லி விட்டார். அதனை உலகத் தலைவர்கள் கேட்கவேண்டும்! உடன் தலையாட்டிகளும் ஒப்பவேண்டும்!

அன்றைய நிலை :

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மாந்தர் கொடுவிலங்கு களைப்போலக்குகைகளிலும், குரங்குகள் போல மரக்கிளைகளிலும் வாழ்ந்தனர். அந்நாளில் அவர்களுக்கும் விருப்பு வெறுப்புக்கள், இன்ப துன்பங்கள் இருந்தன; விருப்பு வெறுப்புக்களால் நட்பும்

1. குறள் : 72 2.திருவாசகம்