உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

113

பொன் : அதனையே 'ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே' என இறைவனுக்குக் கூறுகிறார்.

கண்

மாணிக்கவாசகர்

தனால் அறிவின் லக்கணமும் ஆண்டவன் இலக்கணமும் ஒன்றே என்பது விளங்கும். இதனால் தான் 'அறிவே கடவுள்' என்று நம் முன்னோர் கூறினர். இதற்குச் சான்றே இக்கோபுரம். இஃது ஆழமானது; அகன்றது; நுண்ணியது!

'மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்' என்பது போல் இஃது அழகுப் பொருள் மட்டுமன்று; மெய்ப்பொருள் விளக்கமும் உடையது என்பதை இப்பொழுதே அறிந்தேன்.

பொன் : சுருக்கமாகிக் கொண்டே உயர்கிறதா? ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி ஓங்கி நிற்கிறது! எட்டாத் தொலைவில் இருப்பார்க்கு எளிதில் தோன்றி வரவேற்கின்றது.

கண்

ஆம்! உயர உயர வரும்போதுதான் தடைகள் தாமே அகல்கின்றன; விரிந்த பார்வை உண்டாகின்றது; தலை நிமிர்ந்து பார்த்தவற்றையும் தலை குனிந்து பார்க்க வைக்கின்றது.உயரத்தின் உயர்வுகள் இவை!

பொன் : கண்ணப்பா! இச் செப்புக் கலசத்தைக் கட்டிப்பிடிக்க முடியுமா? நடுக்கமில்லாதவர்கள் நன்றாக உட்காரலாம்! நமக்கேது நடுக்கம்; உட்கார். ஆனால், 'சொக்கலிங்கம் உண்டே துணை' என்னும் நம்பிக்கையுடன் நம் கைப்பிடியையும் அழுத்தமாகவே வைத்துக் கொள் வோம். நாம் இருக்கும் இத் தெற்குக் கோபுரம் அன்றி எத்தனை கோபுரங்கள் தெரிகின்றன? தொலை நோக்கி பையில் இருப்பதை மறந்து விட்டாயா? எடுத்து வைத்துக் கொண்டு பார்.

கண்

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு,ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று. இதனுடன் பன்னிரண்டு கோபுரங்கள் தெரிகின்றன. தங்க விமானங்கள் இரண்டும் தெரிகின்றன! எல்லாம் கைக்கு எட்டிய தொலைவில் தெரிகின்றன.

பொன் : சரி. மேல வாயிலில் ஒரு கோபுரம்; வடக்கு வாயிலில் ஒரு கோபுரம்; சொக்கர் முன்னே கீழவாயிலில் ஒரு கோபுரம். இம் மூன்றுமே ஒன்பது நிலைக் கோபுரங்கள்.