உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 ஓ

அப்படியானால் நான்கு தலைவாயில் கோபுரங் களுமே, ஒன்பது நிலைக் கோபுரங்களே!

பொன் : ஆமாம். இவற்றில் மேலக்கோபுரம் 46.2 மீட்டர் உயரம்; அது பராக்கிரம பாண்டியனால் கட்டப் பெற்றது. வடக்குக் கோபுரம் 45.6 மீட்டர் உயரம்; அது கிருட்டிணவீரப்ப நாயக்கரால் கட்டப்பெற்றது. மொட்டைக் கோபுரம் என்பதொரு பெயரும் அதற்கு உண்டு. கிழக்குக் கோபுரம் பெரிய கோபுரங்களுள் பழைமையானது. சுந்தரபாண்டியன் கோபுரம் எனப்பெறும். அது மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பெற்றது. அதன் உயரம் 45.9 மீட்டர்.

கண்

ஏறத்தாழ இந் நான்கு கோபுரங்களும் ஒத்த உயரத் திலேயே கட்டப்பட்டுள்ளன.

பொன் : பொற்றாமரைக் குளத்தின் வடக்குப்பக்கம் கிழக்கே பார். ஏழு நிலைக்கோபுரம் ஒன்று தெரிகிறதே, அது மீனாட்சி நாயக்கர் மண்டபத்திலிருந்து அம்மன் கோயிலுக்கு வரும் வழியில் உள்ளது. அதன் அழகினைக் கருதி அதனைச் சித்திரக் கோபுரம் என்பர். அதனைத் தளவாய் அரியநாத முதலியாரின் மைந்தர் காளத்தி முதலியார் கட்டினார். அதன் உயரம் 35.1 மீட்டர்.

கண்

அம்மன் கோயிலுக்கு முன்னே ஒரு கோபுரம் தெரிகிதே!

பொன் : ஆம். அது வேம்பத்தூரார் கோபுரம் எனப்படும். அதனைக் கட்டியவர் வேம்பத்தூர் ஆனந்தத் தாண்டவ நம்பி என்பார். அது கிளிக்கூட்டு மண்டபத்தில் இருந்து அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. மூன்று நிலைகளை யுடைய அக் கோபுரத்தின் உயரம் 12 மீட்டர்.

கண்

அதற்கும் மேற்கே ஒரு கோபுரம் தெரிகிறது. அது மேற்கு ஆடி வீதியின் கிழக்கே உள்ளதா?

பொன் : ஆம்; அம்மன் கோயில் இரண்டாம் திருச் சுற்றின் மேற்கே உள்ளது. அந்த ஐந்து நிலைக் கோபுரம் 19.2 மீட்டர் உயரமானது.