உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் 31 31ஓ

பொன் : ஒரு மரத்தில் கிளைத்த 'முக்கவடுகள்'

கண்

வை

என்பதை விளக்கி மும்மையும் ஒருமையாம் பெருமையை விளக்கும் சிற்பம் இது. இதனை இத் தூணில் அடித்து வைப்பதற்கே முரண்பாடுகள் எழுந்தனவாம். வைக்கத்தக்கது, தகாதது எனச் சொற்போர்கள் நிகழ்ந்தனவாம். ஆறுமாத காலம் மறுப்பும், மறுப்புக்கு மறுப்புமாக நடந்து இறுதியில் வைக்கத் தக்கதே என முடிவாயிற்றாம். சிலையில் ஒருமைப்பாடு காட்டவே இப் பாடு என்றால் நிலையில் ஒருமைப்பாடு வர எப்பாடு? இறைவனுக்கே வெளிச்சம்! மும்மூர்த்தியும் ஒன்றாக இம் மூர்த்தி நன்றாகவே காட்சி வழங்குகிறார்; கண் குளிரக் கண்டு மகிழலாம். இப்படியே மேற்கே போகலாம். இம் மேல் கடைசித் தூணை அடுத்த தூணில் 'காளி' காட்சி தருகிறார்.

கம்பத்தடி மண்டபத்துக் காளிபோலவே வெகுளி மிக்குத் தோன்றுகிறாள்! கண்விழிகள் கனல் தெறிக்கக் காட்சி தருகின்றன. வில்லும் வேலும் எடுத்தபின் வெகுளி இல்லாமல் போகுமா?

பொன் : நேர் எதிரே வடப்பக்கம் பார்! தெற்குப்பார்த்து உருத்திர தாண்டவர் உள்ளார். காரைக்கால் அம்மையார் கனிந்துருகிக் கண்டு களிக்கிறார். எலும்புக் கூடாக விளங்கும் அவர் கூந்தல் எவ்வளவு நீளம்; மடித்துச் சுருட்டிக் கட்டியும் மேலே நீண்டு செல்கிறது.நான்முகனும் திருமாலும் இருபாலும் இருந்து கூத்துக் காண்கின்றனர். நந்தியம் பெருமான் குடமுழா இசைக்கிறார். கிழக்கு நடைவழி எதிருக்கு எதிர் சோமசுந்தரரும் தாடகையும் என்றால், மேற்கு நடைவழி எதிருக்கு எதிர் உருத்திரரும் காளியும்! முன்னது இமய மலைக்காட்சி! பின்னது திருவாலங் காட்டுக் காட்சி.

கண்

தென்மேற்கு மூலைத் தூணின் கீழ்ப்பக்கம் பெரிய தொருயாளி, அதன் கீழ்ச் சிறிய யாளி; அதன் கீழ் யானை; அதன் கீழ் மனித மிருகம்; அதன் கீழ் இலிங்கம்!

பொன்: வடமேற்கு மூலைத் தூணிலும் இத்தகைய வேலைப் பாடுகள் உள்ளன. மேற்கு வாயிலுக்கு வடக்குள்ள