உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

ஆம்!

மதுரைக் கோயில் வரலாறு

இரண்டு தூண்களு மே

121

தேர்த்தட்டின்

அமைப்புடையவை; இரண்டிலும் சக்கரங்களும் உள்ளன. பெருமான் மேலே எழுந்தருளியுள்ளார். பொன் : வடகிழக்கு மூலையில் உள்ள யாளித் தூணுக்கு அடுத்த மேற்குத் தூணில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? இறைவன் விற்கை வேந்தராகக் காட்சி வழங்குகிறார். இக்கோலம் எதற்கு என்பதை இதே நேரில் தெற்குக் கோடியில் தோன்றும் சிற்பத்தைக் கொண்டு பார்.

கண்

மும்மார்புடைய அம்மை அவர்! தடாதகையாகப் பிறந்த போது மும்மார்பினராக இருந்ததும், மண வாளனைக் காணுங்கால் ஒரு மார்பு மறையும் எனக் கணியன் கூறியதுமாகிய செய்தி திருவிளையாடலில் உள்ளதுதானே! இப்பொழுது புரிகிறது!

பொன் : அம்மை கூர்ந்து நோக்குகிறார் பெருமானை; பெருமான் நிலம் நோக்குகிறார்.

கண் : “யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

தானோக்கி மெல்ல நகும்"

என்பதுபோல் முதற்கண் பெருமான் நோக்கி யிருப்பார்; அப்பொழுது அம்மை நிலம் நோக்கி யிருப்பார்; பின்னர் அம்மை நோக்கியிருக்கிறார்; பெருமான் கீழே நோக்குகிறார். இயற்கைப் புணர்ச்சியை இலக்கண நூல்கள் 'தெய்வத்துக் கூட்டம்' என்று கூறும். இஃது உண்மையாகவே தெய்வத்துக் கூட்டம் ஆயிற்று!

பொன் : தென்கிழக்கு மூலையில் உள்ள தூணைப் பார்க்கலாம். இதன் கிழக்குப் பக்கம் ஓரடிப் பெருமான் (ஏகபாத மூர்த்தி) உள்ளார்.

கண்

கம்பத்தடி மண்டபத்துள்ள ஏகபாதமூர்த்தி, இறைவனே! இங்கே மூவருமே ஒருவராகி ஒரு காலில் நிற்கும் உயர்வுடையது. இடப்பால் நான்முகனும் வலப்பால் திருமாலும் தத்தம் தோற்றப் பொலிவுடன் விளங்குகின்றனர். டையே பெருமான் விளங்கு

கிறார்.