உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

125

பொன் : இங்கே வசந்த விழா நடைபெறும் என்றேனா? இதற்கு வசந்தமண்டபம்' என்ற பெயரும் உண்டு. இம் மண்டபத்தின் நாற்புறங்களிலும் உள்ள அகழ்களில் தண்ணீர் தேக்கி நிறுத்தி வைப்பர்; சுற்று மேடைகளில் பார்வையாளர் இருந்து விழாவைக் கண்டு மகிழ்வர்; இப்பொழுது உள் மண்டபப் பகுதியைத் தடுத்து அதன் வெளிப்புறம் சுற்றுப் புறமெல்லாம் கடை களாக்கப்பட்டுள்ளன.

கண்

இம் மண்டபமும் கோயிலின் பகுதியாகி, இராச கோபுரம் அதன் முகப்பாகி இருக்குமானால் இக் கோயில் சுற்றும் கிழக்குப் பகுதிபோலவே மற்றைப் பகுதிகளிலும் வளர்ந்திருக்கும். இந்தப் பெரிய கோயில் அப்பொழுது இருமடங்கு மும்மடங்காகிக் காட்சி தந்திருக்கும். "சிறியன சிந்தியாதான்" என்னும் கம்பன் வாக்கால் திருமலை மன்னரின் திருப்பணியைக் கூறலாம் போலும்!

பொன் : கூறுவதற்கு என்ன ஐயம்! ஒருநாள் இப் புது மண்டப் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதன் தலைமைச் சிற்பி சுமந்திரமூர்த்தி சிற்ப வேலையில் தம்மை மறந்து ஈடுபட்டிருந்தார். வெற்றிலை போடும் பழக்கமுடையவர் அவர். வேலையின் ஊடே கையை நீட்டும் குறிப்பைப் பார்த்து ஏவல் பையன் வெற்றிலை மடித்துத் தருவான். ஆனால் சுமந்திரமூர்த்தி வெற்றி லைக்குக் கைந்நீட்டிய ஒரு பொழுதில் வெற்றிலை மடித்துத் தரும் பையன் இல்லை. ஆனால், அமைதி யாகத் திருமலை மன்னர் ஆங்கு வந்து சிற்ப வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். நீட்டிய கைக்குறிப்பை அவர் அறிவார். ஆதலால் தாமே வெற்றிலை மடித்துத் தந்தார். சிற்பி மேலும் கைந் நீட்டியபோதும் வெற்றிலை மடித்துத் தந்து கொண் டிருந்தார். வெற்றிலை வாங்கும் போதில் திரும்பிப் பார்த்துவிட்ட சிற்பி நடுநடுங்கிப் போனார். ‘என்ன தவறு செய்துவிட்டேன்' என்று துடித்தார். தவறு செய்த தம் வீரர்களைச் சுத்தியலால் தட்டிக் கொள்ளவும் துணிந்தார். திருமலை மன்னர் சிற்ப வேந்தனுக்குச் சீமை வேந்தன் பணிசெய்யப் பேறு பெற்றிருக்க வேண்டுமே என்று தேற்றினார்! சுமந்திரன் விரலை வெட்டிக்கொண்டான் என்றும் மன்னர் வெள்ளியால் விரல் செய்து வைத்தார் என்றும் கதையுண்டு.