உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31

புதிய பொற்கைப் பாண்டியன் கதை போலிருக்கிறது இது! ஆனால், திருமலை மன்னர் கலையார்வத்தைக் கண்முன் காட்டும் சான்றுகள் பெருகிக் கிடக்கின்றன. அவற்றுடன் இக் கதைச் சான்றும் சேர்ந்து கொள்கிறது. இத் திருப்பணியில் ஈடுபட்ட உழைப்பாளர்கள் அனைவரையும் எச் சிறு கவலையும் இல்லாமல் இக் கலைத்தொழில் ஒன்றிலேயே ஈடுபடுத்தியிருந்தால் அல்லாமல் இத்தகைய அரிய பணிகளைச் செய்திருக்க இயலாது!

பொன் : திருமலை மன்னரின் அறிவு நுட்பத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஆண்டுதோறும் வசந்த விழாவில் திருமலை மன்னருக்குப் பரிவட்டம் கட்டும் வழக்கம் உண்டு. புது மண்டபம் கட்டிய முதலாண்டில் தாமே பரிவட்டம் கட்டிக் கொண்டார். அடுத்த ஆண்டில் தம் சிலைதான் புது மண்டபத்தில் இருக்கிறதே! அதில் கட்டுமாறு செய்தார். அவ்வழக்கம் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளது.

கண்

இப்படி ஏற்பாடு செய்யாமல் இருந்திருந்தால் அவர் தலைமறைந்த பின்னர் பரிவட்டம் கட்டுதலும் தலைமறைவாகியிருக்குமே! தலையே இல்லாத போது எப்படிக் கட்டுவது? ஆதலால் பறிபோகாத தலையைப் பார்த்துப் பரிவட்டம் கட்டச் செய்த அறிவுத் தேர்ச்சி பாராட்டுக்குரியதுதான்!

பொன் : இம் மண்டபத்தின் நீளம் 100 மீட்டர்; அகலம் 31.5 மீட்டர்; உயரம் 75 மீட்டர்; இதிலுள்ள தூண்கள் 124. இதற்குத் தெற்கே அம்மன் கோயில் முன்னே இருப்பது நகரா மண்டபம்! இராசகோபுரத்திற்குத் தெற்கே அம்மன் கோயில் முன்னே இருப்பது விட்டவாசல்! பாண்டியர்களின் பழைய கோட்டைப் பகுதியில் இடியாமல் விட்ட பகுதி இது. ஆதலால் இப்பெயர் பெற்றது.

கண்

நல்லது;

கோயிலுக்குள் இருப்பது ஆடிவீதி; கோயிலுக்கு வெளிச் சுற்றாக இருப்பது சித்திரைவீதி; அடுத்துள்ள வீதி ஆவணிமூல வீதி.