உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

127

பொன் : இதனை அடுத்த பெரிய வீதி மாசிவீதி. இவ் வீதிகள் நான்கு பக்கங்களிலும் உண்டு; அவ்வத் திசைப்

கண்

கு

பெயருடன் வீதிப் பெயரும் சேர்த்து வழங்குகின்றது.

இப் பெயர்கள் வந்த காரணம் என்ன?

பொன் : ஆடி, சித்திரை, ஆவணி, மாசி என்பவை மாதப் பெயர்கள் என்பது தெளிவானதுதானே. இத் திங்களில் அவ்வவ் வீதிகளில் கோயில் திருவிழாக்கள் நடைபெறு வதால் இப் பெயர்களைப் பெற்றன.

கண்

கோபுரத்தில் ஏறிப்பார்த்தது போல் இம் மண்டபத்தில் ஏறிப்பார்க்க முடியாதா? வழி இல்லையா?

பொன் : உண்டு! வா, போகலாம். இப்பொழுது இம் மண்டப முகட்டைப் பழுதுபார்க்கும் எண்ணத்தால் போடப் பட்ட மூங்கில் பாலம் தென் கிழக்கு மேடையில் இருந்து உள்ளது. அங்கேபோய் மண்டபத்தின் மேல் கோடிக்குச் சென்றால், சொக்கர் கோயில் முகப்பி லுள்ள சுந்தரபாண்டியன் கோபுரத்தினைக் கைக்கு எட்டிய பக்கத்தில் காணலாம். நாம். தொலைநோக்கி வேறு வைத்துள்ளோமா? ஒவ்வொரு சுதைச் சிற்பத்தையும் உன்னிப்பாகக் கண்டு மகிழலாம்! மெல்ல ஏறு! பார்த்து நட!

கண்

தண்ணீர் தானே வழிந்தோடும் வண்ணம் நுண்ணிய நோக்கில் மூடுதளம் போட்டுள்ளது பார்க்க வேண்டிய ஒன்று தான். கோபுரத்தைப் பார்ப்போம்.

பொன் : கண்ணப்பா! நாம் பேசாமல் பார்த்து விட்டு இறங்குவோம். இந்த ஒரு பக்கத்தில் உள்ள சுதை களைப் பற்றி மட்டும் இன்று முழுவதும் பேசி முடியாது. இக் கோபுரத்தில் மட்டும் 1011 சுதைகள் உள்ளனவாம்!

கண்

சரி சரி! கோபுரங்களைப் பார்க்கவே நாம் தனிச் சுற்றுலா மேற்கொள்ள வேண்டும்! இப்பொழுது பார்த்த மகிழ்ச்சியில் இறங்கலாம்.

பொன் : நல்லது.