உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைத் திருக்கோயில்

137

மூன்றாம் தூணில் றைவன் கூத்தப் பெருமானாக ஆடுகின்றான். நந்தி குடமுழாத் தட்டுகிறார். வடக்குப் பக்கத்தில் காமதகனர் (காமனை எரித்தவர்) உள்ளார்.

நான்காம் தூணில் சந்திரசேகரர்

(நிலவணிந்தார்) ரிசபாந்திகர் (காளைக் கருளியோர்) இலிங்கோத்பவர் (அரியயன் அறியார்) கயிலாயஆரூடர் (கயிலைப் பெருமான்) ஆகியோர் உள்ளனர்.

.

வடக்கு வரிசை நான்கு தூண்களுள் மேற்குத்தூணில் ஏகபாத மூர்த்தி (ஓரடிப் பெருமான் ரிசபாரூடர் (விடையேறி) சக்கரதரர் (ஆழியங்கையர்) உமையொருபாகர், சங்கர நாராயணர் ஆகியோர் சிற்பங்கள் உள்ளன.

ஆறாம்தூணில் சலந்திர அனுக்கிரகர், தக்கணாமூர்த்தி (தென்முகக்கடவுள்) ஆகியோரும், ஏழாம் தூணில் கச சம்மாரர் (கரியுரிபோர்த்தவர்) சண்டேசுவர அனுக்கிரகர் ஆகியோரும்

உள்ளனர்.

கடைசித் தூணில் பிச்சாடனர் (பிச்சைப் பெருமான்) உருத்திரர், கிராத அர்ச்சுனர் (வேடர் பெருமானும் அருச்சுனனும்), சோமாசுகந்தர் (இறைவன் இறைவி முருகர்) ஆகியோர் உள்ளனர்.

நாற்கால் மண்டபம் :

இவ்வெட்டுத் தூண்களுக்கும் ஊடே இருக்கிறது ஒரு நாற்கால் மண்டபம். அதற்கு வீரப்பமண்டபம் என்பது பெயர். கிருட்டிண வீரப்பநாயக்கர் கட்டியது. இப்பெரு மண்டபம் என்பதை முன்னரே அறிந்தோம்! இது பின்னர் ஏழு கோயில் நகரத்தார்களால் திருப்பணி செய்து அழகூட்டப்பட்டது.

இம்மண்டபத்தின் எப்பக்கமும் 'சிற்பவேலைப்பாடே, பீடம், தூண், குழைவு, வளைவு ஆகியவற்றில் எல்லாம் அழகிய வேலைப்பாடு, முகடு, விட்டம், சட்டம், தகடு, சங்கிலி, ஆணி இவையெல்லாம் அழகுவேலை! இதன் மேற் பாவு கல், ஒரே கல்! வீரபத்திரர் :

கம்பத்தடி மண்டபத்திற்குக் கிழக்கே மேற்கு நோக்கி நிற்பவர் அக்கினி வீரபத்திரரும், அகோர வீரபத்திரரும் ஆவர். அழகுச் சிலையிலே இவ்வளவு அச்சுறுத்த வல்ல தோற்றத்தை அமைப்பது மிக அருமைப்பாடேயாகும்.