உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

இளங்குமரனார் தமிழ்வளம் -31 31ஓ

ஊர்த்துவ தாண்டவர் :

வீரபத்திரர்,வாயிலுக்கு வடக்குப் பக்கம் என்றால் தெற்குப் பக்கத்தில் ஊர்த்துவதாண்டவரும், பத்திரகாளியும் உள்ளனர். இறைவனுக்குப் பத்துக்கை. பத்திரகாளிக்கு எட்டுக்கை.

திருச்சுற்று :

கம்பத்தடி மண்டபத்திற்குத் தெற்குச் சுற்றின் கிழக்கில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. வடமேற்கு மூலையில் சங்கத்தார் கோயில் உள்ளது. முன்னதில் மாணிக்கவாசகர், சுந்தரர், நாவுக்கரசர், ஞானசம்பந்தர், நெடுமாறர், மங்கையர்க் கரசியார், குலச்சிறையார், மூர்த்தியார் உள்ளனர். பின்னதில் சங்கப்புலவர்கள் உள்ளனர்.

நாயக மண்டபம் :

இத்திருச்சுற்றின் வடகிழக்குக் கோடியில் மண்டப நாயகம் எனப்படும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இதனைக் கட்டிய பெரியவர் சின்னப்ப நாயக்கர் (கி.பி. 1526) இங்கே கூத்தப்பிரான் எழுந்தருளியுள்ளார்.

முதற்சுற்று :

சொக்கர் கோயில் முதற் சுற்றின் வாயிலுக்கு வடப்பக்கம் பழனியாண்டவரும், தென்பக்கம் திருவருள் பிள்ளையாரும் உள்ளனர். ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் என்னும் வாயில் காவலர் இருவர் வனப்பாக உள்ளனர். உட்சுவர் முழுமையும் திருவிளையாடல் கதைகள் ஓவியமாகத் தீட்டப் பட்டுள்ளன. கதிரவன், உசை, நாயன்மார், இலிங்கப் பெருமான், கலைமகள், சத்தமாதர், இறைவர், பிள்ளையார் ஆகியோர் தென்புறத்தில் சிலைகளாக உளர். தென்மேற்கில் உற்சவ மூர்த்தி கோயிலும் வடமேற்கில் காசிவிசுவநாதர் கோயிலும் உள்ளன. வடக்குத் திருச்சுற்றின் மேற்குக் கடைசியில் மேதா தக்கணா மூர்த்தியுள்ளார். இங்கே தனிக்கோயிலில் சித்தர் பெருமான் உள்ளார். வலுவமைந்த உடல்; அழகுமிக்க தோற்றம்; தண்டின்மேல் ஒருகை; மந்திரக்கோல் ஒருகையில் வலக் காலைக் கீழே மடித்து இடக்காலை அதன்மேல் மடித்துப்போட்டுப் பீடத்தின் மேல் பெருமிதமாக அமர்ந்துள்ளார் சித்தர் பெருமான் 'எல்லாம் வல்ல சித்தர்' கோயில் என்பது அது. அதனை விக்கிரம பாண்டியன் என்பான் அமைத்தான் (கி.பி. 1315-1347) இக்கோயிலுக்குக் கிழக்கில் கனகசபை அட்சரலிங்கம்