உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைத் திருக்கோயில்

141

அமைந்துள்ளன. சிற்பத்தில் இசைகொஞ்சுகிறது என்றால் நகைச்சுவை கொஞ்சுவதையும் ஒருசிற்பத்தில் நிலை நாட்டியுள்ளான் ஒரு சிற்பி. திரௌபதிக்குத் தென்பக்கம் நிற்கிறான் அக்'கோணன்'! தோளில் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு வீறுடன் ஓடும் ஒருவன் தோற்றம், வைத்தகண் வாங்காமல் பார்க்க வைக்கிறது.

நடுமண்டபம் :

கூத்தப்பெருமான் திருமுன் உள்ள நடுமண்டபத்து, இரு பால் தூண்களிலும் அழகு அழகுச் சிற்பங்கள் பிச்சைப் பெருமான், தருமன், வீமன், இரதி, வீரபத்திரர்,மோகினி, அருச்சுனன், மனிதவிலங்கு, மன்மதன், அக்கினி வீரபத்திரர் ஆகியோர் உள்ளனர். இவற்றுள் இரதிசிலையும், வீரபத்திரர் சிலையும் இசைபாடும் சிலைகள்! தூண்களில் தான் இசை யென்றால், சிலைகளிலும் இசை! வெவ்வேறு இடங்களில் தட்டினால் வெவ்வேறு

160F!

ஆயிரக்கால் மண்டபத்தின் முன்னுள்ள வீரவசந்தராயர் மண்டபத்தின் முகப்பின் வடக்கில் ஒருவீரன் தன் தோளில் தன் காதலியை வைத்துள்ளான். தெற்கில் வீரபத்திரர் உள்ளார். ஐந்தலைப் பாம்புக் குடைக்கீழ் எண்கைச் சத்தியும் வீற்றிருக்கிறாள். இப்பகுதியில் வளையல் கடைகள் உள்ளன.

பிறமண்டபங்கள் :

இம்மண்படத்திற்குத் தெற்கே மங்கையர்க்கரசியார் மண்டபம் உள்ளது. அது 1960 ஆம் ஆண்டுத் திருப்பணியின் போது புதிதாகக் கட்டப்பட்ட மண்டபம் நின்ற சீர் நெடுமாறனாம் பாண்டியன், மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார், திருஞானசம்பந்தர் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன.

அதனை அடுத்துள்ளது சேர்வைகாரர் மண்டபம். அதனைக் கட்டிய பெரிய மருது சிலை அங்குள்ளது. அம் மண்டபத்திற்கு மேற்கில் இருப்பது திருமண மண்டபம். அதனைக் கட்டிய விசயரெங்க சொக்கநாத நாயக்கர் சிலையாக நிற்கிறார். அழகிய மேற்கட்டு மரச்செதுக்குவேலை செய்த வயிநாகரம் வேங்கடாசலம் செட்டியாரும் நாகப்பச் செட்டி யாரும் ஓவியமாக விளங்குகின்றனர்.

திருமண மண்டபத்திற்குத் தெற்கில் உள்ளது முத்து ராமய்யர் மண்டபம். அதனைக் கடந்தால் கிழக்கில் யானை