உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

-

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

கட்டுமால், மேற்கில் வன்னியடிப் பிள்ளையார் கோயில் ஆகியவை உள்ளன.

ஆடி வீதி:

கிழக்கு ஆடி வீதியில் இருந்து வலமாகத் திரும்பினால் தெற்கு ஆடி வீதி. அதில் திருப்புகழ் சபை, தேவாரப் பாடசாலை, நூல்நிலையம், சைவசித்தாந்த சபை, தேவாரப் பாடசாலை, நூல்நிலையம், சைவசித்தாந்த சபை, தெய்வநெறிக் கழகம், பன்னிரு திருமுறை மன்றம், கோயில் அலுவலகம் ஆகியவை உள்ளன.

மேற்கு ஆடி வீதியில் பசுமடம், சிவகங்கைத் திருக்கோயில் அலுவலகம் ஆகியவை உள்ளன. வடமேற்கு மூலையில் திருப்புகழ் மண்டபமும், வடக்கில் திருவள்ளுவர் கழகமும் உள்ளன. வடக்குக் கோபுரவாயிலின் இருபாலும் இசைத் தூண்கள் ஐந்து உள்ளன.

வடக்கு கோபுர வாயிலுக்கு நேரே தெற்கில் இருப்பது கூட்டு வழிபாட்டு மண்டபம். இப்பகுதியில் தான் முன்பு கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் இருந்தது என்பர். வடக்கு ஆடிவீதியில் இருந்து வலமாகத் திரும்பினால் பதினாறு கால்மண்டபம் ஒன்றுள்ளது. அதற்குத் தட்டுச்சுற்று மண்டபம் என்ற பெயரும் உண்டு. மாணிக்கவாசகருக்காக இறைவன் மண் சுமந்தது முதலிய திருவிளையாடல்கள் ஆவணி மூலத்திரு நாளில் இம்மண்டபத்தில் நிகழும்.

கோபுரங்கள் :

நான்கு வாயில் பக்கங்களிலும் கோபுரங்கள் உள்ளன. அவை எல்லாமும் ஒன்பது நிலைக் கோபுரங்கள்.

தெற்குக் கோபுர உயரம் 48 மீட்டர். அதன் அடிமட்ட நீளம் 32.4 மீட்டர். அகலம் 30.1 மீட்டர். இதனைக் கி.பி. 1559 இல் சிராமலைச் செவ்வந்தி மூர்த்தி செட்டியார் என்பவர் கட்டினார்.

மேலக் கோபுரம் 46.2 மீட்டர் உயரம். அது பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது.

வடக்குக் கோபுரம் 45.6 மீட்டர் உயரம். அது கிருட்டிண வீரப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. மொட்டைக் கோபுரம் என்பது இதற்கொரு பெயர்.