உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

318

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

32. வளையல் விற்றது

பிச்சைப் பெருமான் (பிச்சாடனர்) கோலத்தில் வந்த றைவனைக் கண்ட தாருகவனத்து முனிவர் மனைவியர் காமுற்று மெலிந்து வளை கழன்று வருந்தி நின்றனர். அவர்கள் நிலையைக் கண்டு சினந்த முனிவர்கள், "நீங்கள் மதுரையில் வணிகர் மகளிராகப் பிறப்பீர்களாக" எனச் சாபம் இட்டனர். முனிவர்களின் மனைவியர் வருந்தி அச் சாபம் நீங்கும் வகையை அருளுமாறு வேண்டினர். அம் முனிவர்கள் “மதுரைச் சொக்கர் பெருமான் வளையல் விற்பவராக வந்து உங்களுக்கு வளையல் தொடும்போது இச்சாபம் நீங்குவீர்" என்றனர். அவ்வாறே அவர்கள் வணிகர் மகளிராய்ப் பிறந்து வளர்ந்தனர்.

முனிவர் மனைவியர்க்கு அருள் செய்து சாப நீக்கம் புரியக் கருதிய இறைவன் வளையல் விற்கும் வணிகனாக வணிகத் தெருவில் வந்தான். அவன் அழகைக் கண்ட மகளிர் போட்டி போட்டுக் கொண்டு அவன் கையால் வளையலிட்டுக் கொள்ள வந்தனர். அவன் வளையல் தொடும்போது கைபட்ட அளவில் சாபம் நீங்கப் பெற்றனர். இறைவன் மின்னென மறைந்து பலருங் காணுமாறு விண்ணில் காட்சி வழங்கினான்.

33. அட்டமாசித்தி உபதேசித்தது

(அட்டமா சித்தி என்பது எட்டுவகைச் சித்திகள். அவை அணிமா, மகிமா, இலகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன.)

திருமுருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் அறுவரும் கூடிவந்து இறைவனிடம் அட்டமாசித்தியை அருளுமாறு வேண்டினர். இறைவன், உமையம்மையைச் சுட்டிக்காட்டி இவளை நினைந்து வழிபட்டால் சித்தி எட்டும் உண்டாம் என்று அட்டமாசித்திகளைக் கூறினான். அப் பெண்கள் உமாதேவியை வழிபடுதலையும் மறந்து அட்டமா சித்தியையும் மறந்து போயினர். அதனை அறிந்த இறைவன் பட்டமங்கை என்னும் ஊரில் நீங்கள் பாறையாகக் கிடக்கக் கடவீர் எனச்சபித்தான். அவ்வாறே அவர்கள் பாறையாய் ஆயிரம் ஆண்டுகள் கிடந்தபின்னர் அச் சபிப்பை நீக்கி யருளுவதாகவும் கூறினான்.

கார்த்திகை மகளிர் பாறையாய் ஆயிரம் ஆண்டுகள் பட்ட மங்கையில் கிடந்தனர். அவர்களுக்கு அருள விரும்பிய இறைவன் அப்பாறைகளின் மேல் அருள் நோக்கு நோக்கினான். மீண்டும் மகளிர் உருப்பெற்று எழுந்து இறைவன் திருவடியை வணங்கினர்.