உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

என்று எழுதியதைத் தம் வாழ்விலே மெய்ப்பித்தவர் பொன்னுச்சாமித் தேவர். 'தந்தையினும் பதின்மடங்கு தனயர்' என்பதுபோல் அப்பாண்டியர் கண்ட மூன்று சங்கங்களின் மேல் நான்காம் சங்கத்தைக் கண்ட நன்மகனார் பாண்டித் துரையைத் தந்த பெருமகனார் இப்பொன்னுச்சாமித் தேவரே என்பது நாவலர் வாக்கை மேலும் மெய்ப்பிப்பதாம்.

பாண்டித்துரை 1867 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 21ஆம் நாள் பிறந்தார். அவருக்கு மூன்றாம் அகவை நடக்கும் போதே தந்தையை இழந்தார். முத்துராமலிங்க சேதுபதிக்குப் பாற்கரன் (பாஸ்கரன்) என்னும் நன்மகனார் 1868 ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 3 ஆம் நாள் பிறந்தார். அவருக்கு ஐந்தாம் அகவை நடக்கும் போதே தந்தையை இழந்தார்! தமிழைக் காக்கப் பிறந்த தவ மக்கள், தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள இயற்கைத் திருவிளையாடல் நடாத்தியது! பொன்னுச்சாமித்தேவர், முத்துராமலிங்க சேதுபதி என்னும் உடன்பிறந்து இணைபிரியாப் பேராளர்கள் போலவே, பாண்டித்துரை, பாற்கரர் ஆகிய இரு வரும் இணைபிரியா உடன் பிறப்பாய் இலங்கினர்.

பாண்டித்துரை, அழகர்ராசு என்னும் புலவரிடம் இளமை தொட்டுத் தமிழ் பயின்றார். வழக்கறிஞர் வேங்கடேசுவரசாத்திரி என்பாரிடம் ஆங்கிலம் பயின்றார். இராமநாத புரத்தில் உள்ள சுவார்ட்சு உயர்பள்ளியில் சேர்ந்து திறமாகப் பயின்றார். பின்னர்ச் சதாவதானம் முத்துசாமி ஐயங்காரிடமும் மதுரை இராமசாமிப் பிள்ளை என்ற ஞானசம்பந்தப் பிள்ளையிடமும் தமிழிலக்கிய இலக்கண நூல்களைப் பயின்றார். திருவாவடு துறைத் திருமடம் சார்ந்த பழனிக்குமாரத் தம்பிரானிடம் சைவ சித்தாந்தப் புலமை பெற்றார்.

பாற்கரர் சென்னைப் பெருநகரில் ஆங்கிலக் கல்வியில் தேர்ந்ததுடன், தமிழிலும் தனித் தேர்ச்சி பெற்று இலங்கினார். இப்பெருமக்கள் பேரவை, முந்தையோர் அவையேபோல் சிறப்புற விளங்கிற்று.குலவித்தை கல்லாமல் பாகம் படும்" என்பது மெய்யாயிற்று.

பாண்டித்துரையின் அவைப் புலவர்களாக விளங்கியவர் களுள் திரு. நாராயண ஐயங்கார், சாமி ஐயங்கார், சுந்தரரேசுவர ஐயர், அரங்கசாமி ஐயங்கார், சிவகாமி யாண்டார், மு. இராகவ ஐயங்கார், பூச்சி சீனிவாச ஐயங்கார் என்பார் குறிப்பிடத்தக்கோர் ஆவர்.