மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
209
'திருக்குறள் பரிமேலழகர் உரையுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வோரதிகாரமாக இவர்களால் (பாண்டித்துரையால்) உபந்நியாசம் செய்யப்பட்டு வந்தது, தொடர்ந்து நடந்து வந்த இவ்வரிய பொருளுரை கேட்பவர்க் கெல்லாம் நல்விருந்தா யிருந்தது. இவ்வாறே கம்பராமாயணம் பெரிய புராணம் போன்ற பேரிலக்கியங்களில் ஒன்றேனும், கந்த புராணம், காஞ்சிப் புராணம், திருவிளையாடற் புராணம் போன்ற புராணங்களில் ஒன்றேனும் வேறு சில்லறைப் பிரபந்தமேனும் படிக்கப் பெற்றும் பொருள் ஆராயப் பெற்றும் நாளும் தவறாது தேவரவர்களின் திருமுன்பு நடந்தேறுவது வழக்கம். இஃதன்றி ஈற்றெழுத்துக் கவிகள் கூறுவதும், தம்பாலுள்ள புலவருள் ஒருவரைக் கொண்டு பிரசங்கம் புரிவிப்பதும், பாடற்பொருள் கூறச் செய்வதும் தேவரவையில் அடிக்கடி நடைபெற்று வந்தன. இவையாவும் பாடமான கவிகள் மறவாதிருத்தற்கும் புலமை பெறுவதற்கும் முன்னோர் கையாண்ட முறைகளே'
(செந்தமிழ் வளர்த்த தேவர்கள் 76 - 77)
பொன்னுச்சாமித் தேவர் தமிழ் நூற்பதிப்புக்கு உதவியது போலவே பாண்டித்துரையும் உதவினார். பெரும் பேராசிரியர் தென்மொழிக் கலைஞர் முனைவர் உ.வே. சாமிநாதையர், புறப்பொருள் வெண்பாமாலை, மணிமேகலை ஆகியவற்றைப் பதிப்பிப்பதற்குப் பொருளுதவி செய்தார். அப்பொருளுதவியும் கேட்டுத் தந்ததோ எனின் அன்று; கொள்ளெனத்தாமே விரும்பித் தந்த கொடை:
"இனிமேல் எந்த நூலை அச்சிடப் போகிறீர்கள்?" என்று
கேட்டார்.
"பலநூல்கள் இருக்கின்றன, மணிமேகலையை அச்சிடலா மென்று நினைத்தேன். ஆனால், இன்னும் அதிலுள்ள சில விசயங்கள் தெளிவுபடவில்லை. புறத்திரட்டென்ற தொகை நூல் ஒன்று இருக்கிறது. அதில் இப்போது வழக்கில் இல்லாத பலநூற் செய்யுட்கள் உள்ளன, புறநானூற்றைப் பதிப்பித்த போது புறத்துறைகளின் இலக்கணங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள எண்ணினேன். அந்நூலிற்கண்ட துறைகளுக்கு விளக்கம் தேடுகையில் புறப்பொருள் வெண்பாமாலை மிகவும் உபயோக மாயிற்று. அதனை நன்கு ஆராய்ந்தேன். அதற்குப் பழைய உரையொன்று என்பால் இருக்கிறது. மூலம் மாத்திரம் சரவணப் பெருமாளையரால் முன்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இப்போது