உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கல்விக்குழுவின் பணிநலம்

தமிழ்ச்சங்க வித்துவக்குழுவென்னும் 'கல்விக் குழுவால்' ஏற்பட்ட நலங்கள் தமிழாய்தல், ஆய்ந்து படைத்த பொருளை இதழில் வெளியிடல் நூலாக்கல் என்னும் அளவுடன் நின்று விடவில்லை. இவை யெல்லாம் சங்கத்தின் வழியே நிகழ்ந்த பணிகளின் ஒரு பகுதியேயாம். மற்றொரு பகுதி பொது அமைப்புகள், அறிஞர் குழுக்கள், அரசு ஆகியவற்றுக்கு அவ்வப் போது வேண்டும் கருத்துரைத்தலும். மொழிநலம் கருதிப் பாடுபடுதலும் வற்புறுத்தி வழிப்படுத்துதலுமாம். அவ்வழி களிலும் சங்கம் தன் கடனைச் செவ்வையாகச் செய்தது.

1902 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாள் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா நிகழ்ந்தது. தமிழ்நாட்டுப் பெரும் புலவர்களும் ஈழநாட்டுப் பெரும் புலவர்களும் புரவலர்களும் கலந்து கொண்டனர். அவ்விழாவில் பங்கு கொண்ட பரிதிமாற் கலைஞர் தமிழுக்குள்ள இடர்களையும், அவற்றைக் களைய வேண்டிய இன்றியமையாமையையும், தமிழ் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய ஆக்கப் பணிகளையும் விரித்துரைத்தார்.

"பொது மக்கள் தமிழுக்கும் புலவர்கள் தமிழுக்கும் பெரிய வேறுபாடு உள்ளது என்றும், அவ்வேறுபாடு நாளடைவில் மிகுகின்றது என்றும், அது மிகாதிருக்கும் பொருட்டு நேரிய வழிகளை நாடவேண்டும் என்றும், அஃது உடன்பாடாயின், புலவர்கள் தம் உயர் நடையினின்றும் இறங்கிப் பொது மக்களை மொழியுணர்ச்சியில் உடன் கொண்டு செல்ல வேண்டும் என்றும்" வலியுறுத்தினார். இது, தமிழை வளர்த்தற்குத் தமிழறிஞர் மேற்கொள்ள வேண்டிய தலையாய கடமை என்பதைத் தமிழ்ச்சங்க முதலாண்டு விழாவிலேயே உரைத்தது குறிப்பிடத்தக்கதாம்.

அந்நாளில் திருவர் (Lord) கர்சான், அரசுப் பேராளராக இருந்தார். வடநாட்டிலும் தென்னாட்டிலும் இருந்த வடமொழி ஆர்வலர்கள் ஒன்றுபட்டு நின்று, 'நாட்டு மொழிகளுக்கு ஏற்றந்தருதல் வடாது' என்றும், 'அதனைக் கல்லூரிகளில் கற்றுத்