உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் -31 31ஓ

தோன்றும் கடுகடுப்பைக் காட்டிய சிற்பி, இவள் முகத்தில் அருவருப்பைக் காட்டவில்லையே! இப்படி யமைப்பது அருமையன்றோ!

முரண்கள், வாழ்வில் அழகும் இன்பமும் ஊட்டாத வையாக இருக்கலாம். ஆனால், கலையில் முரண்களே தனிச் சிறப்புடையவை.நீ சொல்லியதையும் இந்தச் சிற்பத்தையும் பார்க்கும்பொழுது எனக்குக் கம்பன் திருமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. “செயிர்ப்பினும் அழகு செய்யும் திருமுகத்து அணங்கு"

பொன்: ஆமாம்! ஆமாம்! கம்பன் இத்தகைய சிற்பத்தைக் கண்டு இப்படிப் பாடியிருக்கவேண்டும். அல்லது கம்பன் படைப்பில் தன்னை மறந்து ஒன்றிப்போன சிற்பி இப்படிப் படைத்திருக்க வேண்டும்.

கண்

கலை வல்லாரின் திறம், காவியம் ஆனால் என்ன, ஓவியம் ஆனால் என்ன, சிற்பம் ஆனால் என்ன, எல்லாம் ஒன்று பட்டு இருக்கும்போலும்!

பொன் : ரெளத்திரிக்கு எதிரே வலப்பால் நிற்பவள் சாமளை! அப் பெயருக்கு ஏற்றவாறு அழகிய வடிவம் தான். 'நீலமேக சாமள ரூபன்' என்று கண்ணனைப் பாராட்டுவர்; இவளை 'நீலமேக சாமள ரூபி' என்று பாராட்டலாம்.

கண்

இந்த அழகை நினைந்து நினைந்து போற்றிப் பிறரும் போற்ற வைக்கின்றது கலைநெஞ்சம்! கொலை நெஞ்சக் கொடுமையைப் பார்! அழகிய மூக்கை உடைத்து விட்டது! இந்த மூக்கை வடிக்க எப்பாடுபட்டிருப்பான் அந்தக் கலைஞன்! இந்தக் கொலைஞன் எவ்வளவு எளிமையாகச் செய்து விட்டான். இதனை வடித்த சிற்பி மட்டும் இதனை இந்நிலையில் கண்டால், எப்படித் துடித்துப் போவான்! தன் குழந்தையைத் தடியன் ஒருவன் காலையும், கையையும் ஒடித்து, மூக்கை உடைத்து, கண்ணைத் தோண்டிக் கொடுமை செய்ததைக் காணும் தாய் என்ன பாடுபடுவாளோ அப்பாடு படுவான்! அவனல்லனோ இதன் அருமையை

உணர்வான்!

பொன் : கலைச் செல்வர்கள் மலிந்த இந்த மண்ணிலேதான் இத்தகைய கொலைப் பிறவிகளும் நடமாடி இருக்கின்றன.