> மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
265
என்பதையும் ஆராய்ச்சிக் குறிப்புகள் தெளிவிக்கின்றன. இன்னும் திருவள்ளுவர் வரலாறு திருக்குறள் உரை பரிமேலழகர் உரைப்பாட வேறுபாடு எனப் பல ஆய்வுக் குறிப்புகள் முதல் தொகுதியிலே இடம் பெற்றுள. பின்னுள தொகுதிகளில் அச்சிட்ட நூல்களொடு சுவடிகளை ஒப்பிட்டு இராமாயணம், பாரதம் முதலிய நூல்களுக்குப் பாட வேறுபாடுகள் காட்டப் பெற்றுள. இவற்றுள் பல இன்னும் பதிப்பாசிரியர்களால் ஏற்றுச் செப்பஞ் செய்யத் தக்கவையாம்.
தொல்காப்பியமும் திருவள்ளுவமும் திருக்கோவையாரும் நன்னூலும் முதலிய நூல்களின்கண் தாம் ஆராய்ச்சியாற் கண்டவைகளைத் தொகுத்து 'நுண்பொருட் கோவை' எனப் பெயர் தந்து சோழவந்தான் அரசஞ் சண்முகனார் எழுதியுள்ளார். அஃதொரு தொடர் கட்டுரையாகும். அன்மொழித் தொகை, அன்மொழித் தொகைப் பொருள்மேல் வரும் ஆகுபெயர், இருவர் மாறு கோள் ஒருதலைத்துணிவு இன்னபல முதல் தொகுதியில் வெளிவந்த இலக்கணக் கட்டுரைகள். சொற்பொருள் ஆய்வாக அகராதி, நிருத்தம், உள்ளது என்பவை வெளிவந்தன. இரட்டையர் மருட்சி, என்பது நாடகம்; 'விவசாய ரசாயன சரித்திரச் சுருக்கம்' என்னும் தொடர்கட்டுரை வேளாண்தொழில் பற்றிய அறிவியல் ஆய்வு நூலாகும். பின்வந்த தொகுதிகளில் இயற்கைப் பொருட்பாடம், சுகசந்தர்சன தீபிகை (உடல் நலத்துறை) என்பனவும் எழுதி நூலாக்கம் பெற்றன. விவசாய நூல் எனவும் ஒருநூல் வெளிவந்தது. வேர்ச்சொற்கட்டுரைகள் செந்தமிழில் அவ்வப்போது வெளிவந்துள. அவற்றை அ குமாரசாமிப்புலவர், ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, தவத்திரு ஞானப்பிரகாச அடிகளார், மாகறல் கார்த்திகேய முதலியார் என்பார் எழுதியுளர்.
தமிழ்ச் சங்கத்து ஆண்டு விழாக்கள், பிறநிகழ்ச்சிகள், தனித்தமிழ்த் தேர்வு, ஆங்கிலத் தமிழ்த் தேர்வு, செயற்குழுக் கூட்டத்தின் நடவடிக்கைகள். தீர்மானங்கள், சங்க வரவு செலவு கணக்கு இன்னவற்றை யெல்லாம் தமிழ் கூறும் நல்லுலகப் பொதுப் பொருளாக்கி வைத்த செவ்விய முரசு செந்தமிழ் இதழேயாம்.
செந்தமிழ் இதழுக்குக் கட்டுரை வழங்குவோர்க்குப் படிவம் ஒன்றுக்கு (8பக்கங்களுக்கு) 4ரூ விகிதம் தருதல் வேண்டும் எனச் சங்கத் தலைவர் பாண்டித்துரைத்தேவர் 22-12-03 ஆம் நாள்