உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266

இளங்குமரனார் தமிழ்வளம் 31

-

-

கல்விக் குழுவில் தீர்மானம் செய்தார். பின்னர் 1915 ஆம் ஆண்டில் சங்கத்தலைவராக இருந்த இராசராசேசுவர சேதுபதியால் பக்கம் ஒன்றுக்கு, கட்டுரைக்குத் தக்கவாறு எட்டணாமுதல் 2ரூபா வரை அன்பளிப்புத்தரும் திட்டம் கொண்டு வரப்பெற்றது. பொருள் இழப்புக்கே ஆட்பட்ட இலக்கிய இதழ்ச்செய்திக்கு அன்பளிப்பும் தரப்பெற்றது வள்ளன்மையால் நிகழ்ந்ததேயன்றி, வருவாய்ப் பெருக்கால் நிகழ்ந்தது அன்று என்பது எவரும் உணரத்தக்கதே.

25-5-04 ஆம் நாள் நிகழ்ந்த ஆய்வுக்குழுவில் கல்லூரி மாணவர்களுக்குச் செந்தமிழ் இதழ் அரைக்கட்டணத்தில் தரவேண்டும் என்று தீர்மானம் செய்யப் பெற்றுள்ளது. அதனைப் பெறவிரும்பும் மாணவர் தாம் பயிலும் கல்லூரித் தலைவர் வழியாகவோ, தமிழாசிரியர் வழியாகவோ தாம் கல்லூரி மாணவர் என்பதைச் சான்றுக் கடிதத்துடன் அனுப்ப வேண்டும் என்றும் திட்டப்படுத்தப் பெற்றுள்ளது.

சங்கத்தில் ஒருநூல் வெளியிடப்பெற்றால் அந்நூலில் அச்சிட்ட படிகளில் மூன்றில் ஒரு பங்கு நூலாசிரியர்க்கு அன்பளிப்பாக வழங்கப் பெற்றது என்று 3-8-1915 இல் நிகழ்ந்த செயற்குழுக் கூட்டத் தீர்மானம் ஒன்றால் அறியப்பெறுகின்றது. அவ்வாறே, ஒரு கட்டுரை ஆசிரியர், தம் கட்டுரையில் படிகள் பெறவிரும்புவராயின், அச்சுக்கூலி இன்றித் தாள்விலை மட்டும் பெற்றுக்கொண்டு 500 படிகள் வரை தரலாம் என்னும் வழக்கம் இருந்தது என்பதும் அச்செயற்குழுக் கூட்டத்தின் மற்றொரு தீர்மானத்தால் அறியப் பெறுகின்றது. (செந்தமிழ் 13) செந்தமிழ் 30 தொகுதிகள் நிறைந்து, முப்பத்தோராம் தொகுதி வெளிவரும் போது, உரிய நாளில் இதழ் வாராமல் தாழ்த்து வந்ததைச் சுட்டிக் காட்டி இலக்கண விளக்க வழிமுறைத் திரு. சோமசுந்தர தேசிகர் எழுதினார். 'தமிழ்ச்சங்கம் செய்யவேண்டிய வேலை' எனத் தலைப்பிட்ட அவர்தம் கட்டுரையை வெளியிட்டுத் தன் நேர்மையை நிலைநாட்டியது செந்தமிழ்.

"சங்கத்திலிருந்து வெளிவரும் செந்தமிழ் என்ற பத்திரி கையின் பிரயோஜனம் அதனை வாசிப்போரால் ஒரு நாளும் மறக்க இயலாது. எனினும், அது காலத்திலே வராதது மிகவும் வருந்தத் தக்கது. (ஆயினும், இரண்டு மூன்று திங்களாகக் காலந் தாழ்க்காது வருகின்றது). இனியும் அவ்வாறே வெளிவர ஏற்பாடு நடைபெறும் என்பது நம்பிக்கை”