உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

267

"செந்தமிழ் வாயிலாக இதுவரை கேட்டுமறியாத பல பழந்தமிழ்ச் சிறுநூல்கள் வெளியாயின. இனியும்பல வெளி வருதல் கூடும் என்பது நாம் எதிர்பார்க்கக் கூடியதொரு நிலையேயாம். தமிழிலக்கியத்தைக் குறித்து ஆராய்ச்சி சிறிது நடக்கின்றதாயினும் இந்தக்காலத்துக்கு வேண்டியதாகக் கருதப்படும் பலவிஷயங்கள் வெளியாவதற்குரிய முயற்சி கைக் கொள்ளல் வேண்டும் என்பது எனது விண்ணப்பம்."

நூல்கள்

இவ்வாறு கூறும் தேசிகர் நாட்டு வரலாறு,அறிவியல் வெளியிட வேண்டியதை வலியுறுத்தியுள்ளார். செந்தமிழ் இன்னும் சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும் இந்த அளவு நடப்பதும் வாங்குவோர் ஊக்கத்தால் அன்றி நடாத்துவோர் ஊக்கத்தால் ஏற்பட்டதே என்றும், "ஆண்டுச் சந்தாவோ மிகக்குறைந்த தொகையான ரூபா நான்கு; மாத மொன்றுக்கு ஐம்பத்தாறு பக்கங் கொண்டு வெளிவருகின்றது. பலநூல்கள் வெளியாகின்றன. இவ்வளவு அருமைவாய்ந்த மாசிகையைத் தமிழர்கள் ஏற்றுப் போற்ற வேண்டியது கடமை என்றும் வலியுறுத்தியுள்ளார்.

79

செந்தமிழ் 31ஆம் தொகுதி பக்கங் குறைந்து வெளிப் படுகின்றது. "அரசாங்கத்தார் வெளியிட்ட காகிதக் கட்டுப் பாட்டு உத்தரவால் செந்தமிழ் பழைய பக்க அளவில் குறைந்து நூற்றுக்கு முப்பதாக வெளிவருகிறது. அதிக அளவில் வெளியிட முயற்சி நடக்கிறது. அநுமதி கிடைத்தபின் செந்தமிழ் அதிகமான பக்கங்களுடன் வெளிவரும். சந்தாநேயர்கள் பக்கக் குறைவைப் பொருட்படுத்தாது வழக்கப்படி செந்தமிழை ஆதரித்துவர வேண்டுகிறோம்" என ஒரு வேண்டுகோள் தமிழ்ச் சங்க மேலாளரால் விடப்பெற்றுள்ளது.

48 ஆம் தொகுதி இரண்டு திங்களுக்கு ஓரிதழாக ஆறுபகுதியளவில் 276 பக்கமாக அமைந்தது. அப்பொழுது கட்டுரை ஆசிரியர்பெயர் கட்டுரைத் தலைப்பின் கீழே அமைக்கப்பெற்றது. அதற்கு முன்னர்த் தொடக்க நாள்முதல் கட்டுரையின் இறுதியிலேயே கட்டுரை யாசிரியர் பெயர் குறிப்பிடப் பெற்றிருந்தது.

56 ஆம் இதழில் ஈற்றடி தந்து பாட்டியற்றும் பயிற்சி தரப் பெற்றுள்ளதை அறிகிறோம்.