272
31ஓ
இளங்குமரனார் தமிழ்வளம் - 31
விழாவை நடாத்தினார். ஆங்குத் தஞ்சைத் தமிழ்ச் சங்கம் தோன்றியது; 'தமிழகம்' என்னும் இதழும் தொடங்கியது. பின்னர்க் கரந்தையில் வித்தியாநிகேதன் என்னும் பெயரால் ஒரு தமிழ்ச்சங்கம் உண்டாயது; அதுவும் இயங்கா தமைந்து, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தோன்றியது. மதுரைத் தமிழ்ச் சங்கத்தைப் போலவே தண்டமிழ்த் தொண்டாற்றுதலைத் தலையாய பணியாகக் கொண்டு இந் நாள் வரை இயன்று வருகின்றது கரந்தைத்தமிழ்ச்சங்கம்.
சங்கங் கண்ட பாண்டியர் பாண்டித்துரை தமிழைத் தமிழ்ச்சங்கத்தின் அகத்தும் வளர்த்தார். புறத்தும் வளர்த்தார். சென்னையிலும் தூத்துக்குடியிலும் பாளையங்கோட்டையிலும் அவர்தம் மணி நா ஒலித்தது. தேனெனப் பாகெனத் தித்திக்கத் தீந்தமிழ்ப் பொழிவு செய்தார். ஆங்காங் கிருந்த புலமையரைக் கண்டு அளவளாவினார். அவர்களை அரவணைத்துத் தமிழன்னைக்குப் பொலிவூட்டும் அருங்கலன்கள் படைக்கத் தூண்டினார். இத்தகைய இனிய பணிகளின் இடையே, பாண்டியர் தொண்டுக்கு வரம்பு கட்டி நிறுத்த இயற்கை கருதிற்றுப் போலும்!
1 66
"ஐயோவித் தமிழுலகம் என்படுமோ என்செயுமோ அந்தோ அந்தோ துய்யாரும் புகழ்ப்பாண்டித் துரையரசைத் தமிழ்மகட்குத்
தொகைசால் நன்மை
செய்தானைச் செல்வர்தமிற் சீமானை வானேயும் சிவணா நல்லீ கையானைக் கவிஞர்கள்தம் கண்மணியைக் காலமெனும் கடற்போ
என்றும்,
கட்டே”
2 மண்ணிரங்க மலையிரங்கப் புனலிரங்கத் தீயிரங்க வளியினோடு விண்ணிரங்க மரம்புள்வி லங்கிவை யிரங்க மேதகுகோள் இரங்க
நாளோ
டெண்ணிரங்க எழுத்திரங்க இசையிரங்கப் பிறகலையும் இரங்க
யார்க்கும்
கண்ணிரங்கக் கருத்திரங்கச் சென்றனையால் மன்னாநின் கருணை
1. கரந்தைக் கவியரசு வேங்கடாசலம்பிள்ளை.
2. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.
யீதோ