உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்றும்,

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்

>தாயில்லாச் சங்கடஞ்சூழ் இளங்குழவி போற்றமிழ்தத் தளிக்கக்

காத்தாய்

நீயில்லாச் சங்கமினி எவ்வாறு நகருறுமோ நெடுஞா லந்தான் வாயில்லாச் சங்கமென மதித்தொருகால் ஒதுக்கிடுமோ

வளர்ப்பார் யாரோ

நோயில்லாச் சங்கரன்தா ளேபோற்றும் பாண்டிமன்னா நுவல்வாய்

அந்தோ

273

என்றும் இன்னவாறு புலவர்கள் இரங்கி அரற்றப் பாண்டித்துரை 1911 ஆம் ஆண்டு திசம்பர்த் திங்கள் இரண்டாம் நாள் விண்ணுல கடைந்தார்.

தனியொரு குடும்பத்திற்குரிய தலைவன் இல்லாமல் அக்குடும்பம் எப்படித் தத்தளித்துப் போகின்றது! தமிழ்ச்சங்கம் என்னும் பொதுவமைப்புத் தன் தலைவனை இல்லாமல் என்ன நிலையை எய்தும்?

பொருளினான் எல்லாம் ஆகும் என்பதை நுனித் துணர்ந்த பாண்டித்துரை, சங்கத்திற்குப் புரவலர் பலரை உருவாக்கி யிருந்தார். திங்கள் தோறும் திட்டமாக உதவுதற்கும் புரவலர் பலரைத் தேடி வைத்திருந்தார், சேதுபதி வேந்தர்களும் நிரந்தரத் தலைவராகவும் புரவலராகவும் விளங்கவும் ஒருப்படுத்தி யிருந்தார். இவ்வளவுக்கும் மேலாக, ஒரு பெரு வருவாயை நிலையாய்ச் சங்கம் பெற்று வழிவழித் தொண்டாற்றுதற்கும் பொறுப்பெடுத்துக் கொண்டார். தமிழ்ச் சங்கத்தின் பொருள் வளம் என்றும் வற்றாமல் இருக்கவேண்டும் என்பதற்காகச் சங்கத்தின் பெயரால், அந்நாளில் வ.உ. சிதம்பரனாரால் தோற்று விக்கப் பெற்ற கப்பல் கழகத்தில் ஓரிலக்க ரூபா முதலீடு செய்தார்! மொழியால் நாடும், நாட்டால் மொழியும் நலம் பெறப் பாண்டியர் கண்ட வழியீது! ஆனால் 'கப்பல் கழகம்' கவிழ்ந்தது! சங்கத்திற்குதவும் எதிர் காலத்து வருவாயும் அழிந்தது; இவ்விக்கட்டான சூழலில், பாண்டித் துரையின் மேல், அளவிலாப் பற்றாளரும், அவர் உதவியால் வளர்ந்தவரும் சங்கத்தின் அடிநாள் தொட்டுச் சங்கப் பொறுப்பில் ஈடுபட்டவரும், நன்றிமறவா நயன் மிக்கவரும் ஆகிய டி.சி. சீனிவாச ஐயங்கார் என்பார் 'பாண்டியரில்லாச் சங்கத்தை 3. பாலகவி வயினாகரம் செட்டியார்.