உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

இனி அப்துல் காதிறு இராவுத்தர் என்பார், இளையான் னி குடி நீதி மன்றத்தின் தனிநடுவர். சோதுகுடி சாத்தனிக்கிராம அஃதார்; தமிழ்ச் சங்கப் புலவர்களுள் ஒருவர். அவர் மதுரைத் தமிழ்ச் சங்க மான்மியம் என்றோர் பாநூல் யாத்தார். வாழ்த் தொடும் நூற்றொரு பாக்களையுடைய அந்நூல் முத்தமிழ்ச் சங்க வரலாறுகளையும் முறையே உரைத்து நான்காம் சங்க வரலாற்றை நன்கனம் விரித்துரைக்கும் செவ்வியில் இயல்கின்றது. நான்காம் சங்கம் என்னும் பகுதியில்,

"முன்னாளில் கடைச்சங்கம் முடிவடைந்த துலகாண்ட மன்னாகும் உக்கிரபாண் டியனிடத்தம் மாண்பாலே இந்நாளில் உக்கிரபாண் டியனென்னும் எழில்வேந்தன் தன்னாற்பெற் றனமதுரைத் தமிழ்ச்சங்கம் எனப்புகன்றார்” என்றும் (92)

"திருவனந்த புரங்கொச்சி மைசூ ராதி

தேசமன்னர் பலருதவி செய்யா நின்றார் இருநிலமுள் ளளவுமிகு விளக்க மேவும்

எந்நாளும் ஒருகுறையும் எய்தாதென்றே

பெருமையுடன் புவிபுகழிந் நான்காஞ் சங்கம்

பெற்றபுகழ் அத்தனையும் பிறழா வாய்மை

மருவுமெங்கள் உக்கிரபாண்டி யற்கே யாக

வாய்ந்ததமிழ்த் தேவியருள் வாழி வாழி"

என்றும் (101) பாடியுள்ள பகுதியை நோக்குக.

இந்நூற்குச் சாற்றுக் கவிபாடிய மு.ரா. அருணாசலக்

கவிராயர்,

66

“முத்தமிழ்க்கு மூன்றென்ன முடித்தசங்கம் நாற்கவிக்கு முந்து நான்காம், இத்தரையில் எனவிளம்ப

99

பாண்டித்துரை சங்கம் தோற்றுவித்தார் என்று உரைத்த மொழி உணர்க.

“முத்தமிழ்ச் சங்கமாம் முச்சங் கப்பெயர்

இத்தமிழ் உலகில் இயல்பெற மாற்றி

நாற்சங் கப்பெயர் நிலவுற நாட்டி’

என்று கொத்தமங்கலம் சி. அ. சி. காசிநாதன் செட்டியாரும்