மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
309
"முன்பாண்டிவ் வுலகளித்த தமிழ்வேந்தர் மூவருளு முதன்மை வாய்ந்த தென்பாண்டி நாட்டரசர் நிறுவியமுச் சங்கமுமுன் சென்ற தாகப் பின்பாண்டில் செய்தவத்தான் மதுரையினான் காஞ்சங்கம் பிறங்க
என்பாண்டித் துரை
99
என்று சுந்தரேச ஐயரும்,
வைத்த
"தென்னர்பலர் ஒருதமிழை மூன்றுமுறை வளர்த்துமது சிதைந்த
தென்னா
முன்னருறும் அறிஞரெலாம் எழுதியகா தையிற்கேட்டே முகவை
வாழ்ந்த
மன்னர்புகழ் தருபாண்டி மகிபாநீ யேயதனை வையத்தென்றும் நன்னர்நிலைத் திடநட்டாய்"
என்று அமராவதி புதூர் வயி. நாக.ராம.சு. இராமநாதச் செட்டியாரும் பாடினர்.
முச்சங்கத்தினும் இச்சங்கம் சிறந்த பான்மையை,
"செந்தமிழ் ஓங்கிய காலத்தினிற் பாண்டிமன்னர் பலர் தெய்வச் சங்க முந்திவளர்த் தாரென்ன லதுசிறப்போ தமிழ்மணமே முற்றுந்தீர்ந்த இந்த நாளி னிற்சங்கம் நீவளர்த்தா யெனல்சிறப்போ எழில்நற் கல்வி சுந்தரஞ்சேர் உயர்பாண்டித் துரைச்சாமி சீமானே தூய்மையோனே”
என்று பூவைகலியாணசுந்தர முதலியாரும்,
“முந்தைநாட் டமிழ்வளர்த்த பாண்டியர்கள் ஓருருவாய் முளைத்தாற் போல
வந்தருளிக் கூடலின் கட்டமிழ்ச்சங்க நிறுவிய நின்மகிமை” என்று நாவலர் ந. மு. வேங்கடசாமி நாட்டாரும் இசைத்தனர். “தமிழுலகின் சிரமகுட மெனமிளிரும் மதுரைநகர் தன்னி லான்றோர் அமிழ்ததென முன்தாபித்த நற்சங்க அமைதியைப்போல் அத்தலத்தே இமிழ்தரவோர் நற்சங்கம் இயற்றியுல விடச்செய்த இனிமை”
என்று மோசூர் முனிசாமி முதலியார் முச்சங்கத்தொடும் இச்சங்கத்தை ஒப்பிட்டு உரைத்தார்.
இன்னும் தமிழ் வரலாறுகளும், பல்வேறு பதிப்பு நூல்களும், கலைக்களஞ்சியமும், உலகத்தமிழ்மாநாட்டு மலரும் இன்னபிறவும் நான்காம் சங்கம் என்றே மதுரைச் சங்கத்தைக்