உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

சுவடி

பதிற்றுப் பத்து புறநானூறு ஆகிய சுவடிகள் சைவசித்தாந்த சமாசப் பதிப்புக்கு உதவியாகின. உதவியாகின. புறத்திரட்டுச் வையாபுரிப் பிள்ளை பதிப்புக்குதவியது. கம்பராமாயணச் சுவடிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிப்புக்கு நலம் சேர்த்தன.பிறர் பிறர்க்கும் சங்கத்தின் பிறசுவடிகள் பயன் பட்டுள்ளன.

இனிச் சங்கச் சுவடி ஒன்றாலேயே உலாக் கொண்ட நூல்களும் உள. அவற்றுள் இரண்டைக் குறிப்பிட்டு அமைவாம். அவை : கூடற் புராணம், திருநூற்றந்தாதி என்பனவாம். இன்னும் சங்கச் சுவடி கொண்டே தனிநூலுருக் கொள்ளாமல் செந்தமிழ் அளவில் அமைந்த நூல்களும் உள. அவற்றையெல்லாம் விரிப்பிற் பெருகுமாகலின் அமைவாம்.

ஐந்திணை ஐம்பது, ஐம்பது, இனியது நாற்பது, கனா நூல், புலவராற்றுப்படை, நேமிநாதம், திணைமாலை நூற்றைம்பது, பன்னிருபாட்டியல், நான்மணிக்கடிகை, பழமொழிநானூறு, மதுரைத்திருப்பணி மாலை, நரிவிருத்தம், மாறனலங்காரம், திருப்புல்லாணிமாலை, பொருட்டொகை நிகண்டு, அகராதி நிகண்டு இன்னபல நூல்களெல்லாம் சங்கச் சுவடிகளைக் கொண்டு ஆய்ந்து வெளிப்பட்டனவேயாம்.

தமிழ்மொழிக்கெனச் சாண்ட்லர் என்பார் அகரமுதலி தொகுக்க முற்பட்டார். அப்பொழுது அவ்வகராதி ஆக்கக் குழுவில் தமிழ்ச்சங்கத்திற்கு உறுப்பாண்மை வழங்கியிருந்தார். சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ் தொடர்பானவற்றை முடிவெடுக்குங்கால் மதுரைத் தமிழ்ச்சங்கக் கருத்தேற்றலைக் கடனாகக் கொண்டிருந்தது. அரசு, தமிழ்ச்சங்கம் நடாத்தும் தேர்வுக்கு உரிமையும் வென்றோர்க்கு வேலைவாய்ப்பும் வழங்கி வந்தது. அண்ணாமலைப்பல்கலைக்கழகம் தமிழ்ச்சங்கத்தாற் தேர்ந்தெடுக்கப் பெற்ற ஒருவரைத் தன் ஆட்சிக் குழுவில் ஏற்றுச் சிறப்புச் செய்தலைத் தானே விரும்பித் தன்கடனாகக் கொண்டது. சங்க நிறுவனரும், அவர்க்குப்பின் வந்த தலைவர் துணைத் தலைவர்களும் தமிழ்சார்ந்த பல்வேறு குழுக்களில் உறுப் பாண்மை பெற்றுச் சிறந்தமை நாடறிந்த செய்தி.

ஒருவரை மதிப்பிடுங்கால் அவர் வாழ்ந்த கால அளவைப் பார்க்கிலும், அவர் செய்த செயல்களையே முதன்மையாகக் காள்ளல மரபு இன்னார்க்குப் பின் இன்னார் என்னும் முறைப்படி முடிசூடிய உடனேய முடியிழந் தோடியவர்க்கும்