இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் ஓ
313
வரலாற்று வரிசையில் இடமுண்டாவது போன்றது அன்று செயலாண்மையால் மதிப்பிடும் சிறப்பு. ஆகலின் தண்டமிழ் மொழிக்குத் தன்னிகரில்லாத் தொண்டுகளைக் காலத்தால் செய்த செய்வித்த பெருமைகளைத் தன்னகத்தே கொண்டது பாண்டித்துரையார் கண்ட பைந்தமிழ்ச் சங்கம். ஆதலின் அதன் தொண்டினையும் ஆக்கச் செயல்களையும் குறைத்து மதிப் பிடுவார் நோக்கு பழியொடு பாவங்கருதுவார் போக்கேயாம். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது”
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலிற் பெரிது”