இதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
ii) பணம்
அனுப்ப
யலாதவர்கள்
321
கெளரவ
அங்கத்தினராக இருப்பார்கள். அவர்களுக்குச் சங்கத்துத் தீர்மானங்கள் மட்டும் அனுப்பப்படல் வேண்டும்.
பிரேரேபித்தவர் மகா-ள-ள- ஸ்ரீ
அக்கிராசனாதிபதி
அவர்கள் ஆமோதித்தவர் மகா-ள-ள-ஸ்ரீ நா.கதிரைவேற் பிள்ளை அவர்கள். எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது.
தீர்மானம்-2 2
இனிச் சங்கத்தின் அங்கத்தினராவோர் முதலிற் பிரவேச தனமாக ரூ.5 அனுப்பல் வேண்டும்.
பிரேரேபித்தவர் மகா-ள-ள-ஸ்ரீ எம்.ஆர்.கந்தசாமிக் கவிராயர் அவர்கள்
ஆமோதித்தவர்" எஸ். பால்வண்ண முதலியார் அவர்கள் எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது.
தீர்மானம்
-
3
சங்க அங்கத்தினர்கள் வருஷோற்சவக் கூட்டத்திற்கு வருதலில் இயற்கையிலேயே விருப்பமும் கடமையும் உடைய ராதலின், வழிச் செலவுகளை அவர்களே சொந்தத்திற் செய்து கொண்டு வரவேண்டும் என்றும், கூட்டங்கூடும் நாட்களில் மதுரையில் அவர்கட்கு இருப்பிடம் உண்டி முதலிய சௌகரியஞ் செய்து உபகரித்தலோடு திரும்புதற்குரிய செலவை இச்சங்கப் பொருட்செலவில் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்தல்.
பிரேரேபித்தவர்
மகா-ள-ள-ஸ்ரீ
சுப்பிரமணியக்கவிராயர் அவர்கள்
திருநெல்வேலி
ஆமோதித்தவர்' நா. கதிரை வேற்பிள்ளை அவர்கள்
எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்டது.
தீர்மானம் - 4
பத்திராதிபர் எழுதுவன நீங்கப் பத்திரிகைக்கு அனுப்பப் படும் ஏனைய விஷயங்கள் சங்கத்தவருள் இருவர் அபிப்பிராயங் கொடுத்த பின்னர்ப் பிரசுரிக்க வேண்டும். அபிப்பிராய பேதம் இருந்தால் அக்கிராசனாதிபதி அவர்கள் தீர்மானப்படி நடத்தல் வேண்டும்.