உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31ஓ

என்று கூறுவதை அல்லாமல், முழுதுறக் காண முடியா எழில் வடிவின் முன்னர் எதனை வைத்தாலும் எடுப்பாக இருக்க முடியுமா? 'வெயிலிடை வைத்த விளக்குப் போல' ஒளி இழக்க வேண்டாவென்று கருதியே எச் சிலையையும் எழுப்பாது விட்ட திறமை நினைதோறும் இன்பம் பெருக்கும்.

இரண்டு செய்திகளைக் கேட்கப் போகிறேன். அன்னை திருக்கையில் கிளியை வைத்தது ஏன்? அவள் அடைக் கலமும் அருளலும் ஆகிய அபய வரதங்களைக் காட்டாமல் இருப்பது ஏன்?

பொன் : கிளி, பறவையுள் வனப்பானது; மழலை பொழிவது; பிள்ளை என்று பெருமையது; அஃது அனைத் துயிர்க்கும் ஓர் அடையாளம். உயிர்களெல்லாம் தாய் அருளாலேதான் இறைவனோடு இரண்டறக் கலத்தல் வேண்டும். தாய், கிளியைத் தோளில் தாங்கிக் கொள்ளுவதன் வழியே அதனை வெளிப்படுத்துகிறாள். 'அபயவரதம் இல்லை என்றாயே, அவை கிளியிலேயே அடங்கிவிட்டன.

கண்

இன்னொன்று; அன்னை அங்கயற்கண்ணி; அவள் அபய வரதத்தைத் திருவிழியாலே வழங்குபவள். ஆதலால் அவள் அருள் நோக்கிலேயே அடங்கி விட்டன அபயவரதங்கள்.

முழு முதல்வி அவள்; ஆதலால் அவள் மற்றை மூர்த்தங்கள் போல அபயவரதங்களைக் காட்டுவாள் அல்லள். அவள் திருவடிப் பேறு ஒன்றே அடியார்க்கு அபயவரதமாகலின் அவற்றைக் கைகளால் காட்டி னாள் அல்லள்.

இனிய செய்திகள் இவை. நாம் அம்மையின் கண் கொள்ளா அழகை நெஞ்சில் தேக்கி வழிபட்டுச் செல்வோம்.

பொன் : இஃது, "அருள்சூல் கொண்ட அங்கயற்கண் அமுதே தாலோ தாலேலோ" எனத் தாலாட்டுப் பாடும் பள்ளியறை. சொக்கர் கோயிலை நண்பகல் உணவுக்குப் பின்னே வந்து பார்த்துக் கொள்ளலாம். கோயிலுக்கும் நடைசார்த்தும் பொழுது, நமக்கும் ஓர் இடைவேளை!