உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. முக்குறுணிப் பிள்ளையார்

பொன் : நாம் கிளிக்கூட்டு மண்டபத்தில் இருந்து இக் கோபுர வாயிலின் வழியே சொக்கர் கோயிலுக்குப் போக வேண்டும். இது முத்துவெளி; இது முத்துலிங்கம்; இது சின்னீசர் கோயில்; இக் கோபுரத்திற்கு நடுக்கட்டுக் கோபுரம் என்பது பெயர். வா! அன்னையை வழிபட்டு அப்பனிடம் வருவார்க்கு அருள் பாலிப்பவர் போல எடுப்பாக அமர்ந் திருக்கிறார் மூத்த பிள்ளையார். இவரை முக்குறுணிப் பிள்ளையார் என்பர்.

கண்

"மத்தள வயிறன்" "மற்பொரு திரள்புய மதயானை' என்று அருணகிரியார் பாடியதை மெய்ப்பிக்கும் திருவுரு! இதற்கு முக்குறுணிப் பிள்ளையார் என்பதா பெயர்?

பொன் : ஆம்! எங்கள் ஊரில் 'பதக்கன்' என்று பட்டப் பெயர் ஒருவருக்கு இருப்பதை நீ அறிவாயே, அதுபோல்.

கண்

நீ

அவன் என்றோ ஒருநாள் பதக்குக் கம்புத் தவசத்தை (எட்டுப்படியை) இடித்துச் சோறாக்கிச் சாப்பிட்டு விட்டானாம். அதுமுதல் அவனுக்குப் ‘பதக்கன்' பெயர் ஏற்பட்டு விட்டதாம்! இவருக்கு அப்படி என்ன வந்தது?

என்று

பொன் : பிள்ளையார் சதுர்த்தி யன்று இவர்க்கு முக்குறுணி (12 படி) அரிசிமாவைப் பிசைந்து ஒரு கொழுக் கட்டையாக்கிப் படைப்பது வழக்கமாம். அதனால் முக்குறுணிப் பிள்ளையார் எனப் பெயர் உண்டா யிற்றாம். இத் திருவுருவம் திருமலை மன்னர், மாரியம்மன் தெப்பக்குளம் வெட்டும் போது கண்டெடுக்கப் பெற்றதாம். அதனை எடுத்துக் கொண்டுவந்து இங்கே வைத்தனராம்.