உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31

பொன் : சிற்பியின் கையில் இருந்து இவ்வாறு தோற்றம் : எடுத்துள்ளனர் என்றால், இதற்கு அடிப்படையாக இவ் வீரபத்திரர் பிறப்பே அச்சுறுத்த வந்தது தானே. : சிவனையும் சத்தியையும் மதியாமல் வேள்வி செய்த தக்கனையும் அவனுக்குத் துணையாக நின்றவர் களையும் தண்டிக்கத்தானே வீரபத்திரர் பிறந்தார்! அப்பன் நெற்றிக் கண்ணில் இருந்து வீரபத்திரர் பிறந்தார்! அம்மை சீற்றத்தில் இருந்து பத்திரகாளி பிறந்தாள்! இங்கே வீரபத்திரர் இருக்கிறார்! பத்திரகாளி?

பொன் : பத்திரகாளி வாயிலுக்குத் தென்பால் ஊர்த்துவ தாண்டவர் முன்னே மயங்கிப் போய் நிற்கிறாள்.

கண் : ஒரு வீரன் உடல் எப்படி இருக்க வேண்டும்? என்று கேட்டால் அவனைக் கையோடு அழைத்துக் கொண்டு வந்து, இவர்கள் முன்னே நிறுத்தி 'இப்படி இருக்க வேண்டும்' என்று காட்டலாம்.

பொன்: உண்மைதான்! வீரர் உடல் ஊதையாக இருத்தல் கூடாது; தொந்தி சரியக் கூடாது! தசை கல்லாக இருக்க வேண்டும்!

கண்

ஆம்! இவர்கள் கல்லாக இருக்கிறார்கள்; கால மெல்லாம் இக் காட்சி வழங்குகிறார்கள்; நாவுக்கு அடிமைப்பட்ட மனிதன் இப்படி இருக்கிறானா? கண்டதையெல்லாம் தின்று கனத்துப் போகிறான்; காணாக்குறைக்கு வேலை எதுவும் செய்வது இல்லை; வெட்டியாக உட்கார்ந்தும் படுத்தும் பொழுதைப் பாழாக்குகிறான்! முறுக்கேற உழைக்கும் உடல் முன்னும் பின்னும் தள்ளுமா?

பொன் : மார்பின் அகலத்தைப் பார்! இடுப்பின் சுருக்கம் பார்! எலும்புத் தாக்கையும், நரம்பு எழுச்சியையும் பார்! முகத்தின் மிடுக்கும், காலின் எடுப்பும், உணர்ச்சித் துடிப்பும் ஒவ்வொன்றும் அருமைதான்!

கண்

வர்

இவர் கால் மிதி போதாதா? இதில் இருந்து கீழே கிடக்கும் இவன் தப்பிப் பிழைப்பானா? சூலத்தின் இருகவடுகளும் இவன் கழுத்தின் இரு பக்கமும் அசையவிடாதபடி குத்திக் கிடப்பதைப்பார்!