உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

79

பொன் : இங்கே கிடப்பவன் இப்படி என்றால், அங்கே கிடப் பவன் கழுத்தின் ஊடே வாள் பாய்ந்து கிடப்பதைப்

பார்; வீழ்ந்து கிடப்பவனும் வீரப்போர் செய்யவே வந்தான் என்பதை அவன் விடாமல் பிடித்திருக்கும் கேடயம் காட்டவில்லையா?

கண் : "அந்தி வான்பெரு மேனியன் கறைமிட றணிந்த

எந்தை தன்வடி வாயவன் நுதல்விழி யிடையே வந்து தோன்றியே முன்னுற நின்றனன் மாதோ முந்து வீரபத் திரனெனும் திறலுடை முதல்வன்” என்று கச்சியப்பர் கூறியது சரிதான்!

பொன் : கச்சியப்பர் கூறியது போல வீரபத்திரர் சொக்கருக்கு முன்னே தான் நிற்கின்றனர். நாம் தென்பால் செல்வோம். இவர் தூக்கிய திருவடியார் (ஊர்த்துவ தாண்டவர்).

கண்

தூக்கிய திருவடி நெற்றிக்கு நேராகவே நிற்கிறது! அதுவும் எவ்வளவு விரைப்பாக, எடுப்பாக உள்ளது. பொன் : ஊன்றிய திருவடி அழகாகத்தான் உள்ளது. அதனினும் அழகாக உள்ளது தூக்கிய திருவடி!

கண்

வீரபத்திரரை அச்சத்தோடு பார்த்த நாம், அடுத்த நொடியிலே இவ்வளவு வியப்போடு பார்க்கிறோம்! இந்தப் பத்திர காளியம்மை வியப்போடு மட்டுமின்றி நாணத்தோடும் பார்க்கிறார்.

பொன் : இறைவனோடானால் என்ன, தோல்வி தோல்வி தானே! 'இப்படித் திருவடி தூக்கி ஆடுகிறாரே இவருக்கு இணையாக நான் எப்படித் திருவடி தூக்கி ஆடி வெற்றி கொள்வேன்! இவர் ஆடல் வல்லார் மட்டுமல்லர்! திகைக்கிறார்.

கண்

,

சூழ்ச்சியும் வல்லார்!' என்று

தூக்கிய திருவடியார் திருவடிக்கீழே இடப்பால் நிற்கும் இக் காரைக்கால் அம்மையார் நகைப்பைப் பாரேன்! எலும்பு தோல் போர்த்த இவருடம்பில் பல் ஒன்று தானே மெலியாமல் இருக்கிறது!

பொன் : தென்பக்கம் ஒரு குரங்குமுகன் வணங்கி நிற்பதைப் பார். இவன் வாலியாகலாம்! ஏனெனில் அவன் சிவநேயனாக இருந்தவன்.