122
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
(அ - ள்) பாத்திரா பாத்திரம் (பாத்திரம் அபாத்திரம்) உதவி செய்யத்தக்க இடமும், உதவி செய்யத் தகாத இடமும்; மாத்திரம் - அளவு; திரணம் வைக்கோல், புல்.
-
ஏற்போர் வகை
24. தானமாம் பாத்தி ரத்தில் விதமது தான்மூன் றாகும் ஆனவுத்த மமத்தி மத்தோ டதமமே அவைகள் என்பார் வானநீர் காய்ந்த யத்தில் வற்றிடும் *வாரி சத்தில்
(23)
போனநீர் உள்ள மட்டும் பொருந்துஞ்சிப் பியில்முத் தாமே.
-
(அ - ள்) தானவகை மூன்று, உத்தமம், மத்திமம், அதமம் என்பன.காய்ந்தயம் (காய்ந்த அயம்) சூடுண்ட இரும்பு ; வாரிசம் தாமரை; உத்தமம்சிப்பி மத்திமம் தாமரை; அதமம் இரும்பு.
தகுதியில்லாக் கொடை
(24)
25. நிறைபெறு சமுத்தி ரத்தில் பெய்தநீர் மழையும், நெய்பால் குறைவற உண்போர்க் கன்னங் கொடுத்தலும், குபேர னான பிரபலர்க் கீந்த சொன்ன தானமும், பேசும் இந்த
(அ
விறல்பெறு தான மூன்றும் வீணென விளம்ப லாமே.
-
ள்) சொன்னதானம் - பொற்கொடை; விறல்பெறு
மேன்மை பெற்ற; விளம்பல் -சொல்லல்.(25)
தகுதிவாய்ந்த துணைகள்
26. அகத்துணை மனைவி; யாக்கைத் துணைசகோ தரனே ஆகும்; செகத்தினில் செல்லும் தேசாந் திரிக்கவன் கற்ற வித்தை; சுகத்தொடு பரலோ கத்தில் துலங்கிய அருளோ டென்றும் இகத்தினில் செய்த தன்மம் துணையதாம் +எண்ணும் காலே.
(அ - ள்) அகத்துணை மனைவி - இல்லறத் துணையாகிய மனைவி; ஆக்கை - உடல்; தேசாந்திரி - நாடு சுற்றுவோன்; செகம் -உலகம்; இகம் - இவ்வுலகம்.
(26)
-
- வனச மீதில். +இயற்றும்.