இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
146. அந்தகர்க்கு உதவு.
அந்தகர் - ஒளி இழந்தவர்.
147. அப்பன் அருள்பெறு.
அப்பன் - இறைவன்.
148. அம்மை குத்துவி.
அம்மை - அம்மைப்பால்; குத்துவி -குத்தச் செய்.
149.ஆய்ந்தோர் இடைப்புகு.
ஆய்ந்தோர் கற்றறிந்தோர்.
150. ஆர்ந்தமர்ந்து இரு.
ஆர்ந்து அடங்கி; அமர்ந்து- உட்கார்ந்து.
151. அல்லல் அகற்று.
துன்பத்தை நீக்கிடு.
152. அவ்வித்து உரையேல்.
அவ்வித்து - பொறாமை கொண்டு.
153. ஆழ்ந்தது உரை.
நுண்ணிய ஆழமான கருத்துக்கலைச் சொல்.
154. அள்ளிக் கொள்ளேல்.
ஆசையால் அனைத்தும் எடுத்துக் கொள்ளாதே.
155. அற்பம் அகற்று.
அற்பம் - சிறுதன்மை; சிறுசெயல்.
156. அன்னம் இட்டுண்.
உணவு அடுத்தவர்க்கு வழங்கிபின் நீ உண்க!
நூற் சுருக்கம்
அகமது மகிழ்ந்து, அன்னமிட்டு உண்.
பழனிச் செட்டியார் இயற்றிய
பழனி நீதி வாக்கியம்
அருஞ் சொற்பொருளுடன் முற்றிற்று.