உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. பழனி நீதிமொழி

காப்பு

குஞ்சர ஆனனன் சூரைகழல் பரசுதும் நெஞ்சம் நினைந்து நீதி மொழிக்கே.

-

குஞ்சுர ஆனனன் யானைமுகன் (பிள்ளையார்); குரை கழல் - ஒலிக்கும் திருவடிகளை; பரசுதும் வணங்குவேம்.

அகர வரிசை நூற்பா

அறம்புரி வாழ்க்கை திறம்புதல் அரிது.

-

திறம்புதல் தவறுதல்; மாறுபடுதல்.

ஆர்ந்தமர்ந் திருத்தல் தேர்ந்தோர் ஒழுக்கம்.

ஆர்ந்து அமர்ந்து

உள்ளத்தை அடக்கி அமைந்து.

தேர்ந்தோர் -தெளிவுடையோர்.

இல்லதும் அல்லதும் சொல்லுவது அல்லல்.

-

இல்லது நடவாதது. அல்லது - நடந்தது அல்லாத ஒன்று, இல்லதைச் சொல்வதும், அல்லதைச் சொல்வதும் அல்லல்

என்க.

ஈனரைச் சேர்ந்து மானம் அழியேல்.

ஈனர் இழிந்தோர். மானம் பெருமை.

-

உற்றது உரைக்கின் ஒற்றுமை வளரும்.

உற்றது - உண்மையாக நிகழ்ந்ததை.

ஊதியம் அன்றி யாதையும் தேடேல்.

எட்டுணை ஆயினும் இட்டுண் டிரு.

எட்டுணை = (எள் + துணை) எள் அளவு

ஏக்கமும் தூக்கமும் ஆக்கம் போக்கும்.