உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இளங்குமரனார் தமிழ்வளம் - 32

ஆக்கம் -செல்வம், நன்மை.

ஐந்தும் ஒடுங்கில் அறிவகத் தகலும்.

ஐந்தும் ஒடுங்கில் -ஐம்பொறிகளும் ஒடுங்கினால். அகத்து அகலும்-உள்ளே விரியும்; உள்ளொளியுண்டாம்.

ஒற்றுமைப் படுதல் உற்றிடத் துதவி.

உற்ற + இடம் - உற்றிடம் உதவிவேண்டும் டம்.

-

ஓர்ந்துணர்ந் தாரைச் சார்ந்துணர்ந் திரு.

ஓர்ந்து உணர்ந்தார் - ஆராய்ந்து அறிந்தார். சார்ந்து -

சேர்ந்து.

ஒளவையைப் போற்றித் தெய்வமெனக் கொள்.

ஒளவை -தாய்.

அஃறிணை இயக்கும் பஃறியென் றிகழேல்.

அஃறிணை உயர்மகன் அல்லாத ஒருவன். பஃறி -ஓடம்

உயிர்மெய் வரிசை

(13)

கண்களுக் கழகு கண்ணோட்டம் உடைமை.

கண்ணோட்டம் - இரக்கம்.

ஙப்போல் அன்றி நானெனச் செப்பேல்.

ஙப்போல் அன்றி - 'ங' என்னும் எழுத்துத் தன்பணிவால் இனத் தலைமை பெறுவதைப்போல் அல்லாமல். செப்பேல் - சொல்லாதே.

சமையம் அறிந்ததில் அமைதல் அறிவு.

சமையம் - காலம்; அமைதல் -அமைந்திருத்தல்.

ஞமலிக்கு இல்லை புவன ஒழுக்கம்.

ஞமலி - நாய் ;புவனம்உலகம்.

அடுத்த பேரைக் கெடுத்தல் ஒழி.

-

அடுத்த நெருங்கிய.

இணக்கம் அறிந்து வணக்கம் கொள்.

ணக்கம் இசைவு வணக்கம் - பணிவு.

-